தொட்டியநாயக்கர்-இராஜகம்பள சமுதாயம் கொல்லவார், சில்லவார், தோக்கலவார் என்ற மூன்று பிரதான பிரிவுகளை உள்ளடக்கியது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடர்த்தியாகவும், சில மாவட்டங்களில் பரவலாகவும் வசித்துவருகிறார்கள். தவிர, தகவல் தொழில்நுட்ப புரட்சிக்குப்பின் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
ஆங்கிலேயர்கள் ஆட்சிவரை, தமிழகத்தில் மிகப்பெரும்பான்மையான பாளையங்களை ஆட்சி செய்து வந்தவர்கள் “தொட்டியநாயக்கர்” சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது வரலாற்றுஉண்மை. நாடு சுத்தந்திரம் பெற்றபின் 1960-1970களிலிருந்து “தொட்டியநாயக்கர்” சமுதாயமக்களின் வீழ்ச்சி தொடங்கியது. அதுவரை மிக அதிகமான நிலங்களை தங்கள் வசம் வைத்திருந்த சமுதாயத்தினர் விவசாயம் வீழ்ச்சியடையத் துவங்கியவுடன் அதற்குமாற்றான வாய்ப்புகளை அடையாளம்கண்டு நிலைநிறுத்திக் கொள்ளத் தவறியதன் விளைவாக தொட்டியநாயக்கர் சமுதாயம் மற்ற முன்னேறிய சமுதாயங்களைக்காட்டிலும் பல்வேறுதுறைகளில் வளர்ச்சி, சுமார் முப்பது ஆண்டுகள் பின்தங்கியுள்ளதை அனுபவரீதியாக உணரமுடிகிறது.