அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
நான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் இலக்கியம் பயின்றவன்.
சென்னை சைதை அரசுக் கல்லூரியில் பி.எட். பட்டமும், அண்ணமலைப் பல்கலைக் கழகத்தில் எம்.எட்., பட்டமும் பெற்றவன்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில். பட்டமும், சென்னை தாம்பரம் கிறித்தவக் கல்லூரி தமிழ்த்துறை வழியாக, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் (Ph.D.,) பட்டமும் பெற்றவன்.
34 ஆண்டுகள் பட்டதாரி தமிழாசிரியர், முதுகலையாசிரியர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக இருந்து ஓய்வுப் பெற்றவன்.
என்னுள் இருக்கும் தமிழ் அறிவு , வளரும் தலைமுறையினருக்கு, குறிப்பாக TNPSC | TET | NET | SLET | UGC | PG TRB | UG TRB போன்ற தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில் இத்தளத்தை தொடங்கி உள்ளேன்.
அரசு வேலை பெற முயற்சி செய்யும் அனைத்து அன்பர்களுக்கும் இது மிகவும் பயன்படும் என்று எண்ணுகிறேன்..
இத்தளத்தில் நான் பதிவிடும் பதிவுகள், உங்கள் வாழ்வில் ஒளியேற்ற பயன்பட வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்.
முனைவர். தங்கையா
தலைமையாசிரியர்(ஓய்வு)
எண் 9487158981