Om muruga 🦚🙏Be happy ..
முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒரு கை முகன்
தம்பியே உன்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் நம்பியே கைத்தொழுவேன் நான்🦚
நாளென் செயும் வினைதானென் செயும் எனை நாடிவந்த கோளென் செயும் கொடுங் கூற்றென் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னேவந்து தோன்றிடினே🦚
எந்தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தா குலமானவை தீர்த்து எனையாள்
கந்தா கதிர்வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறைநாயகனே🦚
ஏறுமயில் ஏறிவிளையாடும் முகம் ஒன்று
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்று
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்று குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்று மாறுபட அசுரரை வதைத்த முகம் ஒன்று வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று ஆறுமுகம் ஆனபொரும் நீ அருள வேண்டும் ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!🦚🙏