Welcome to CPS - Easy Math Tutorial !
"தூணிலும் இருப்பான் துருப்பிலும் இருப்பான் - இறைவன்" என்பது முன்னோர்களின் கூற்று. அப்படிப்பார்த்தால் எங்கும் நிறைந்து இருப்பது கணிதமே. படித்தவரும், படிக்காதவரும் நம் அனைவரும் அன்றாட வாழ்வில் தினமும் கணிதத்துடன் தான் வாழ்கின்றோம்.
நான் கணிதத்தை கடவுளின் ஒரு அவதாரமாகத்தான் பார்க்கிறேன். ஏனென்றால், சிலருக்கு கணிதம் என்றால் அலாதி பிரியம்; சிலருக்கு பிடிக்கவில்லையானாலும் அதை தொற்றிக்கொண்டு வாழ்கிறார்கள்; மற்றும் சிலர் வெறுத்து விலகி செல்கிறார்கள்; ஆனாலும் கணிதம் நம்மை விட்டு விடாமல் நம் அன்றாட வாழ்வில் நம் அனைவருடனும் பயணித்துக்கொண்டுதான் இருக்கின்றது.
வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகில் உண்டு, என்னை விட திறம்பட பாடம் நடத்தும் ஆசிரியர்கள் நிறைய பேர் நிறைந்த இங்கு, எனக்கு எப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை என்னால் முடிந்த வரை முயன்று செய்திருக்கிறேன்.
இந்த YouTube channel தமிழ் வழியில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டது. எனதருமை மாணவச் செல்வங்களுக்கும், என் சக ஆசிரியர்களுக்கும் என் அன்பார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...