சபை கூடுகை நேரம் : காலை 7.00 to 9:30 வரை திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம், காலை 10:30 to 12:30 வரை கோவை உக்கடம் பகுதியிலும் ஆராதனை உண்டு
இத்தளத்தில் பதிவேற்றப்படும் செய்திகளின் முக்கிய நோக்கம், விசுவாசிகளின் பக்திவிருத்தி மட்டுமே! இன்றைய காலகட்டங்களில் சபைகளை குறித்த தவறான கண்ணோட்டம் பல இடங்களில் நிலவுகின்றன. சபையில் நடக்கும் ஆராதனை முறைமைகள் மற்றவர்களுக்கு எரிச்சலூட்டி, புரியாத நிலையில் இருப்பது வருந்ததக்கது. சிலரின் தவறான பிரசங்கங்களும், வேதகோட்பாடுகளும் இத்தளத்தில் தைரியமாகவும், நிதானமாகவும் எடுத்தாளப்பட்டு, எது சரியான சத்தியம் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தளத்தில் வார்த்தைகளை கற்றுக்கொடுக்கும் போதகர் சாலமன் அவர்கள், தனது 24 ஆம் வயதில் தேவனை அறிந்து இரட்சிப்பிற்குள் நடத்தப்பட்டார். அதன் பின் ஊழியம் செய்ய தேவ அழைப்பை பெற்று, வேதாகம கல்லூரியில் வேதம் கற்று அடிப்படை போதனைகளை சரியாக போதித்துவருகிறார். திருப்பூரில் தியோஸ் காஸ்பல் ஹால் என்ற பெயரில் சபை கூடுகையும் உண்டு. ஆக தொடர்ந்து ஊழியம் செய்யும் சகோதரன் மற்றும் அவரது குழுவினருக்காக ஜெபித்துக்கொள்ளவும் ஆமென்