பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான இலக்கிய, இலக்கண, மொழிப் பாடங்களை எளிமைப்படுத்தித் தருதல்.
TNPSC, TRB, TET, NET, SET, POLICE, UPSC… போன்ற போட்டித் தேர்வுகளுக்கு அணியமா(தயாரா)கும் தேர்வர்களுக்குப் பயன்படும் வகையில், இலக்கியம், இலக்கணம், மொழி வரலாறு, நாட்டுப்புறவியல், கல்வெட்டு உள்ளிட்ட தமிழின் பல்வேறு துறைசார்ந்த கருத்துகளை எளிமையாக்கிக் காணொலி வடிவிலும் வினா-விடை முறையிலும் தருதல்.
தமிழின் பல்துறை துறைசார்ந்த கருத்துகளை உலகோர் அறியச் செய்வதன்வழி தமிழின் பெருமையை உலகறியச் செய்தல் உள்ளிட்ட பல நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வலையொலித்தளம் தொடங்கப்பட்டுள்ளது.