KNRians TV

கூத்தாநல்லூர் மற்றும் சுற்றி உள்ள ஊர்களுக்கான பிரத்யேக முதல் சேனல்.

KNR என்பது "K" ootha "N" allu "R"  ன் சுருக்கம். KNRian என்றால் "கூத்தாநல்லூர் காரர்" என்றும், KNRians என்றால் "கூத்தாநல்லூர் காரர்கள்" என்று பொருள் படும்

கூத்தாநல்லூர் தமிழ் நாட்டில் முஸ்லிம்கள் பெரும் வாரியாக வாழும் பிரபலமான ஊர்களில் ஒன்று.  இது திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி- திருவாரூர் இடையே அமைந்துள்ளது.

தமிழக முஸ்லிம்களின் வரலாற்றில் கூத்தாநல்லூர் குறிப்பிட படவேண்டிய ஒரு ஊர்

- நாகூர் ஷாஹுல் ஹமீத் பாதுஷா அவர்கள் விஜயம் செய்து துஆ செய்த ஊர்

- நூற்றாண்டை கடந்து இன்றும் இமாம்களை உருவாக்கிக் கொண்டிருக்கிற  "மன்ப உல் உலா அரபிக் கல்லூரி" உள்ள  ஊர்

- குர்ஆனிற்கு விரிவுரை (தர்ஜுமா எனும் அன்வாருல் குர்ஆன்) எழுதிய "ஆதம் டிரஸ்ட்"  உள்ள ஊர்

- குர்ஆன், ஹதீஸ் மற்றும் சீறாவிற்கு அடுத்த படியாக அதிகமான உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள  புர்தா ஷரீபை  தமிழில் மொழி பெயர்த்த  "ஈத் மீலாத்  நபவிய்யி  சபை"  உள்ள ஊர்

- 75+ ஆண்டுகளுகளாக சீறா சொற்பொழி, சீறா மாநாட்டை நடத்தி வரும் "ஜஷ்ன மீலாத் சொஸைட்டி" உள்ள ஊர்