அருள்மிகு கமல விநாயகர் சத்சங்கம், சென்னையில், அயன்புரம், மற்றும் வில்லிவாக்கம் என்ற இரு பகுதிகளுக்கு நடுவே உள்ள பகுதி இணைப்பு பெட்டி தொழிற்சாலை, குடியிருப்பு பகுதி.இப்பகுதியில் சுமார் 600 ஆண்டுகள் பழமையாக அமைந்துள்ளது அருள்மிகு கமல விநாயகர் திருக்கோயில், இது இந்து அறநிலையத்துறையின் பொறுப்பில் உள்ள கோயில்.
இத்தலத்தில் அருள் பாலிக்கும் அருள்மிகு கமல விநாயகர் திருப்பெயரால் தொடங்கப்பட்டது இச்சபை.
1962 முதல் திருக்கோயிலில் செயல்பட்ட இச்சபை 1974 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கோயிலை ஒட்டியுள்ள பகுதியில் தனக்கென ஒரு வளாகத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல்படுகிறது.
இச்சங்கத்தின் கருவரையில், நித்திய வழிபாட்டிற்காக கமல விநாயகர் சிறிய கற்படிம வடிவிலும், அழகிய பஞ்சலோகத் திருமேனி “சொக்கநாதர்’’ என்ற திருநாமத்துடனும் நந்தியெம்பெருமானுடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.
சத்சங்கத்தின் செயல்பாடுகள் சைவ சமய வழிபாடுகள்,சொற்பொழிவுகள்,இசை நிகழ்வுகள்,சமுதாயப் பணிகள்,சமய வளர்ச்சி பணி .
சத்சங்கத்தில் சைவசமய தொடர் சொற்பொழிவுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.