அன்பு உறவுகளுக்கு வணக்கம்
நான் இந்த சேனல் ஆரம்பித்ததன் நோக்கம் ....... நம்முடைய பாட்டனும் பூட்டனும் வாழ்ந்த ஆரோக்கிய வாழ்விற்கு உங்களை மாற்றவேண்டும். சிறுதானியத்தின் பயன்கள் பாரம்பரிய அரிசிகளின் பயன்கள், சிறுதானிய உணவு சமைக்கும் முறை பாரம்பரிய அரிசிகள் சமைக்கும் முறை போன்றவற்றை அறிமுகப்படுத்தி உங்கள் எல்லோரையும் பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானிய அரிசிகள் சமைக்கும் சமையல் கலை வல்லுநர்களாக மாற்றி நீங்களும் உங்கள் குடும்பமும் ஆரோக்கிய வாழ்விற்குள் அடியெடுத்து வைக்க வேண்டும் நானும் என் குடும்பத்தினரும் கடந்த 25 ஆண்டுகளாக அன்றாடம் சிறுதானிய உணவு உட்கொண்டு வருகிறோம். "யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக" அன்புடன்
உங்கள் ஜெயா
(முனைவர். இசுப்புலட்சுமி)