சிவபதம் Sivapatham

(சிவ தேவார பதிகங்கள் மற்றும் திருப்புகழ்)அருள்மிகு கொடியிடை நாயகி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் வட திருமுல்லை வாயில் சந்தனச் சாந்தின் சுந்தர போற்றி சிந்தனைக் கரிய சிவமே போற்றி.
சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்
சிதம்பர நடம்புரி சிவத்தைப்
பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப் பதிசிவ பதத்தைத்தற் பதத்தை இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை யாவுமாய் அல்லவாம் பொருளைச்
சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச் சாமியைக் கண்டுகொண் டேனே.
இதனால்,
சிதம்பரப் பொருளும், சிவ பதப் பொருளும், சச்சிதானந்த நிறைவுமாவது பரசிவ மென்பது விளக்கியவாறாம்.