குழந்தைக்கு சோறு ஊட்ட அம்மாக்கள் சொல்லும் கதை....
பாட்டி சுட்ட வடையை காக்கா தூக்கி போன கதை.....
வேடனின் காலில் கடித்து புறாவை கட்டெறும்பு காப்பாற்றிய கதை...
கோடாளியை தொலைத்த மரவெட்டிக்கு தேவதை பரிசளித்த கதை....
அப்பத்தை நரி பங்கிட்டபோது குரங்குகள் ஏமாந்த கதை...
இப்படி ஏகப்பட்ட கதைகள் காலம் காலமாக சொல்லப்பட்டு வந்தாலும்...
அவற்றின் சாராம்சம் மாறாமலும், மேலும் சுவாரசியமாகவும் சொல்லுகின்ற விதம் தான்,
இன்னும் அவற்றை சலிக்காமல் கேட்டுக் கொண்டிருக்க தூண்டுகின்றன.
அப்படி கதையாக இல்லாமல், நம் சமூகத்தில் நடந்த உண்மை சம்பவங்கள் பல்வேறு கோணங்களில் சொல்லப்பட்டாலும்....
அந்த விவரங்களை வழக்குத் தொடர்பான உண்மை தகவல்களுடன் வழங்கும்போது, எதிர்பார்ப்பு எகிறத்தான் செய்யும்...
அப்படி, பேசப்பட்ட சம்பவங்கள் மற்றும் நபர்கள் குறித்து தகவல்களை வழங்குகிறார்கள்.
இப்படிக்கு இவர்கள் ! ! !