முஸ்லிம் சமூகத்தை கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் முதன்மை சமூகமாக வளர்ச்சியடைய செய்வதும் அதன் மூலம் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவதும் தான் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் முதன்மையான இலக்கு.
இந்த இலக்கை அடைவதற்கு முஸ்லிம்களின் பாரம்பரிய கல்வி வழிமுறையான ஆரம்பக் கல்வியிலிருந்து ஆய்வுக்கல்வி வரை அரசின் பாடத்துடன் இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட்ட கல்வி முறையாக மாற்றி அமைத்திட வேண்டும்.
மார்க்கல்வி கல்வி – உலக கல்வி இணைக்கப்பட்ட கல்வி முறைக்கு முஸ்லிம் சமூகம் மீண்டும் திரும்ப வேண்டும் என்ற கருத்தியலை கடந்த 20 ஆண்டு காலமாக தமிழகத்திலும் தமிழ்பேசும் முஸ்லிம்கள் வாழும் வெளிநாடுகளிலும் தொடர்ச்சியாக பரப்புரை செய்து வரும் சகோ.CMN சலீம் அவர்களால் 2009 இல் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்.
கல்வி இயக்கத்தின் சார்பில் சமூக நீதிமுரசு என்ற மாத இதழ் கடந்த 15 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள்,போன்றவை தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.
WhatsApp :- +919789234073
+918939198063