என்னை பற்றி
நான் எனது பள்ளிக்கல்வியை அரசு பள்ளியிலும் பொறியியல் படிப்பை கிண்டி கல்லுரியில்(ANNA UNIVERSITY) முடித்தேன்
6 வருடம் INFOSYS நிறுவனத்தில் SENIOR SYSTEM ENGINEERஆக பணிபுரிந்தேன் பின் பணியை துறந்து முதல் முயற்சியில் TNPSC GROUP 2-ல் தேர்ச்சி பெற்றேன். இதுவரை 4 முறை குரூப் 2 பதவிக்கு பணி நியமன ஆணை பெற்றுள்ளேன்(4 முறையும் மாநில அளவில் முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள்ளேன்)TNPSC GROUP 1 MAIN தேர்வு 7 முறை எழுதி 2 முறை நேர்முக தேர்வினை எதிர்கொண்டேன்.2013 GROUP 1 தேர்வில் மாநில அளவில் 17வது இடம் பிடித்தேன். போட்டித்தேர்விற்கு 2012 முதல் தமிழ்நாட்டின் முன்னணி பயிற்சி நிறுவனங்களின் மூலம் பயிற்சி அளித்து வருகிறேன்.
தற்போது தமிழநாடு வேலைவாய்ப்பு துறை நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்,தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் நடத்தும் இலவச TNPSC பயிற்சி வகுப்புகள்,மாவட்ட ஆட்சியரின் நிதி மூலம் இயங்கும் மலைவாழ் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளில் அங்கமாக உள்ளேன்
நான் 12 ஆண்டுகள் படித்ததை, அந்த அனுபவத்தை உங்களுடன் பகிர இவ்வெளியை பயன்படுத்திக்கொள்கிறேன்
நன்றி