Daily Agri Updates, Integrated Crop Management, Integrated Pest and Disease Management, Sericulture, Apiculture, Mushroom Production and Cultivation aspects of Agriculture and Horticultural Crops.
நான் முனைவர் சீ. விஜய். என்னுடைய இளமறிவியல் வேளாண்மை படிப்பினை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முடித்தேன். அதன் பிறகு முதுகலை மற்றும் முனைவர் பட்டத்தினை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் முடித்துள்ளேன். வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிர் பாதுகாப்பு தொழில்நுட்ப வல்லுனராக ஐந்து வருடம் பணியாற்றியுள்ளேன். அதன்பிறகு வேளாண்மைக் கல்லுரியில் கடந்த 12 வருடமாக உதவி பேராசிரியராக பணியாற்றி வருகின்றேன். விவசாயிகள் மற்றும் வேளாண் மாணவ மாணவியர்கள் அனுபவ ரீதியாக தெரிந்து கொள்வதற்காக இந்த சேனலினை ஆரம்பித்துள்ளேன். 30 ஆராய்ச்சி கட்டுரைகள், 50 தொழில்நுட்ப கட்டுரைகள், 5 புத்தகங்கள், 20 வானொலி உரைகள் மற்றும் 50 நாளேடு கட்டுரைகளை எழுதியுள்ளேன். என்னுடைய பணிக்காலஙகளில் 500 க்கும் மேற்பட்ட பயிற்சிகள் மற்றும் வகுப்புகளை விவசாயிகளுக்கு எடுத்துள்ளேன்.