இலகு புளிக் கஞ்சி… வாய்க்கு ருசியான காலை நேர உணவு… Jaffna Spicy Puli Kanchi..

Описание к видео இலகு புளிக் கஞ்சி… வாய்க்கு ருசியான காலை நேர உணவு… Jaffna Spicy Puli Kanchi..

தேவையான பொருட்கள்
சிவப்பு பச்சை அரிசி
தேங்காய்ப்பால்
தேசிக்காய்
உப்பு
வெங்காயம்
பச்சைமிளகாய்
கருவேப்பிலை
வறுத்த பயறு

சிவப்பு பச்சை அரிசியை நன்றாக கழுவி தண்ணீர் விட்டு அவிய விடவும். அரைவாசி அவிந்த பின்னர் வறுத்த பயரினை சேர்க்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அவியவிடவும். அரிசி, பயறு முழுமையாக அவிந்த பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிடவும்.. அனைத்தும் நன்றாக அவிந்த பின்னர் சிறிதாக வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு உங்கள் சுவைக்கேற்ப தேசிக்காய் புளி சேர்க்கவும்.

இலகுவான புளிக் கஞ்சி தயாராகிவிட்டது. இது உடம்பு சரியில்லாத நேரங்களில் வாய்க்கு சுவையாக இருக்கும்.

Комментарии

Информация по комментариям в разработке