ஜோதி நடமிடும் - மூலா நிலமதின் திருப்புகழ் | Moola nilamathin - Thirupuggazh(1275) by Anjana.B

Описание к видео ஜோதி நடமிடும் - மூலா நிலமதின் திருப்புகழ் | Moola nilamathin - Thirupuggazh(1275) by Anjana.B

Lyrics:

தானா தனதன தானா தனதன
தானா தனதன ...... தனதான

......... பாடல் .........

மூலா நிலமதின் மேலே மனதுறு
மோகா டவிசுடர் ...... தனைநாடி

மோனா நிலைதனை நானா வகையிலு
மோதா நெறிமுறை ...... முதல்கூறும்

லீலா விதமுன தாலே கதிபெற
நேமா ரகசிய ...... வுபதேசம்

நீடூ ழிதனிலை வாடா மணியொளி
நீதா பலமது ...... தருவாயே

நாலா ருசியமு தாலே திருமறை
நாலா யதுசெப ...... மணிமாலை

நாடாய் தவரிடர் கேடா வரிகரி
நாரா யணர்திரு ...... மருகோனே

சூலா திபர்சிவ ஞானார் யமனுதை
காலார் தரவரு ...... குருநாதா

தோதீ திகுதிகு தீதீ செகசெக
சோதீ நடமிடு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

(முதல் இரண்டு அடிகளை அன்வயப்படுத்தி பொருள் தரப்படுகிறது)

மனதுறு மோக அடவி ... மனத்தில் பொருந்தியுள்ள ஆசை
என்ற காடு

மூலா நிலமதின் மேலே சுடர் தனைநாடி ... (வேறு வழிகளில்
செல்லாமல்) மூலாதார நிலைக்கு மேல் உள்ள ஜோதியினை*
நாடிச்சென்று,

மோனா நிலைதனை நானா வகையிலும் ஓதா ... மெளன
நிலையை, பலவகைகளிலும் கற்று,

நெறிமுறை முதல்கூறும் ... நன்னெறி வகைகளைக் காட்டுகின்ற

லீலா விதம் உனதாலே கதிபெற ... உனது பலவகையான
விளையாட்டுக்களை உன்னருளாலே யான் கண்டு முக்தி பெற,

நேமா ரகசிய வுபதேசம் ... ஒழுக்க விதிக்கு உட்பட்ட ரகசிய
உபதேசத்தின்

பலமது தருவாயே ... பயன்தனை எனக்கு அருள்வாயாக.

நீடூழிதனிலை வாடா மணியொளி நீதா ... நீண்ட
ஊழிக்காலத்தும் (எப்போதும்) தன் நிலை வாடாத சுயம்பிரகாச மணி
ஜோதியே, நீதிமானே,

நாலா ருசியமுதாலே ... பலவகையான இன்பச் சுவையமுதம்
பருகிய உணர்ச்சியாலே,

திருமறை நாலாயது செப மணிமாலை ... அழகிய வேதங்கள்
நான்கையும், ஜெபமணிமாலை கொண்டு

நாடாய் தவரிடர் கேடா ... நாடிச் சென்று ஆராயும் தவ
சிரேஷ்டர்களின் துன்பங்களை அழிப்பவனே,

அரிகரி நாரா யணர்திரு மருகோனே ... ஹரி ஹரி என்று
ஓதப்படும் நாராயணரின், லக்ஷ்மியின் மருமகனே,

சூலா திபர்சிவ ஞானார் ... சூலாயுதம் ஏந்திய தலைவரும்,
சிவஞானத்தினரும்,

யமனுதை காலார் ... காலனை உதைத்த திருவடியினருமான
சிவபெருமான்

தரவரு குருநாதா ... தந்தருள வந்த குருமூர்த்தியே,

தோதீ திகுதிகு தீதீ செக ... தோதீ திகுதிகு தீதீ செக என்ற
தாளத்தில்

செக சோதீ நடமிடு பெருமாளே. ... ஜெகஜ்ஜோதியாக நடனம்
செய்யும் பெருமாளே.

English Lyrics:

Song 1275 - mUlA nilamadhin (common)

mUlA nilamathin mElE manathuRu
mOkA davisudar ...... thanainAdi

mOnA nilaithanai nAnA vakaiyilu
mOthA neRimuRai ...... muthalkURum

leelA vithamuna thAlE kathipeRa
nEmA rakasiya ...... vupathEsam

needU zhithanilai vAdA maNiyoLi
neethA palamathu ...... tharuvAyE

nAlA rusiyamu thAlE thirumaRai
nAlA yathusepa ...... maNimAlai

nAdAy thavaridar kEdA varikari
nArA yaNarthiru ...... marukOnE

chUlA thiparsiva njAnAr yamanuthai
kAlAr tharavaru ...... kurunAthA

thOthee thikuthiku theethee sekaseka
sOthee nadamidu ...... perumALE.

......... Meaning .........

(The first two lines have been rearranged for proper meaning).

manathuRu mOkA davi: The forest of desire which grows in the mind,

mUlA nilamathin mElEsudar thanainAdi: (withut spreading wildly) should transcend the flame far above the mUlAdhara Peetam*

mOnA nilaithanai nAnA vakaiyilu mOthA: and realise the sublime silent state in several ways.

neRimuRai muthalkURum: The right path is shown by

leelA vithamuna thAlE kathipeRa: Your multiple mystical ways leading to salvation.

nEmA rakasiya vupathEsam: Bless me with Your preaching of the secret discipline governed by moral code

palamathu tharuvAyE: and grant me the benefit thereof.

needU zhithanilai vAdA maNiyoLi neethA: You are the eternal flame that never shows any diminishing, and You are the dispenser of justice!

nAlA rusiyamu thAlE: Tasting sweetly like nectar in several ways,

thirumaRai nAlA yathusepa maNimAlai: the four great scriptures are chanted with meditation beeds by

nAdAy thavaridar kEdA: those saints who seek to do research in them, and their sufferings are removed by You.

arikari nArA yaNarthiru marukOnE: You are the nephew of NArAyana (who is chanted by the name of Hari Hari) and of Lakshmi!

chUlA thipar siva njAnAr: He holds the trident in His hand; He is the embodiment of Saivite Knowledge;

yamanuthai kAlAr tharavaru kurunAthA: and He kicked the God of Death (Yaman) by His foot. He is Lord SivA who blessed us with You, Oh Great Master!

thOthee thikuthiku theethee seka: To the beat of "thOthee thikuthiku theethee seka"

seka sOthee nadamidu perumALE.: You dance as the brilliant light in this world, Oh Great One!

Original sung by - Arunagirinathar Aiya
Guru - Siggapi Ramasamy Aunty

Комментарии

Информация по комментариям в разработке