MGR Mega Hit Thatthuva Padalgal | எம். ஜி. ஆர்-ன் காலத்தால் அழியாத தத்துவ பாடல்கள்-Part-4 | HQ Audio

Описание к видео MGR Mega Hit Thatthuva Padalgal | எம். ஜி. ஆர்-ன் காலத்தால் அழியாத தத்துவ பாடல்கள்-Part-4 | HQ Audio

காலத்தை வென்றவரின் காலத்தால் அழியாத தத்துவப்பாடல்களை இங்கே பகிர்கின்றோம். நமது புரட்சித் தலைவர், இதயக்கனி, பொன்மனச்செம்மல் அவர்களை பற்றி சில குறிப்புகள்..!

எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 – திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார்.

அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.

Комментарии

Информация по комментариям в разработке