சீதை ராமனின் தங்கையா? ராவணனின் மகளா? | 300 ராமாயணங்கள் | SangathamizhanTV
300 ராமாயணம் PDF link: http://www.trans-techresearch.net/wp-...
300 ராமாயணங்கள்.. 5 எடுத்துக்காட்டுக் கள்..’ என்னும் தலைப்பில் பண்டிதர் ஏ.கே.ராமா னுஜன் தொகுத்து எழுதிய கட்டுரை அது. அய்யங்கார் பிரிவைச் சார்ந்த இவர் பிறந்தது மைசூரில். வரலாற்று அறிஞரான இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. 1993-ல் இயற்கை எய்தினார் ராமானுஜன். 2006-ல் இவரது கட்டுரை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. அந்தக் கட்டுரையில் ஏ.கே.ராமானுஜன் சொல்வதென்ன? ஒன்றா? இரண்டா? முன்னூறு ராமாயணங் கள் இருக்கின்றன.. அதுவும் அன்னமேசி, பாலினேசி, பெங்காலி, கம்போடியன், சைனீஸ், குஜராத்தி, ஜாவனிஸ், கன்னடம், காஷ்மீரி, கோட்டனேசி, மலேசியன், மராத்தி, ஒரியா, பிராகிருதம், சமஸ்கிருதம், சாந்தலி, சிங்களம், தமிழ், தெலுங்கு, தாய், திபேத்தியன் என இத்தனை மொழிகளில். முன்னூறு விதமாகப் பேசவும் எழுதவும் பட்டிருக்கிறது என ராமாயணங்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டிருக்கிறார் காமில் பல்கே என்ற அறிஞர். முன்னூரா? மூவாயிரமா? இத்தனை ராமாயணங்கள் எப்படி இருக்க முடியும்?.
வால்மீகி ராமாயணத்தில் கவுதம மகரிஷியின் பத்தினியான அகலிகை மீது மோகம் கொண்டு கவுதமரின் உருவத்தில் வரும் இந்திரனை முதலிலேயே அடையாளம் கண்டுகொள்கிறாள் அவள். ஆனாலும், உணர்வுகளால் உந்தப்பட்டு விரும்பியே உறவு கொள்கிறாள். தனது குடிலுக்கு திரும்பி வந்த கவுதம மகரிஷி, இவ்விருவரும் தவறிழைத்ததை தனது ஞானத்தால் அறி கிறார். கல்லாகிப் போ…’என்று அகலிகை யை சபிக்கிறார். இந்திரனிடமோ “"இது போன்ற தவறினை இனி எப்போதும் நீ பண்ண முடியாது. உனது விரைக் காய் களை இப்போதே நீ இழப்பாய்…’’என்று சாபமிடுகிறார். அவரது சாபத்தால் இந்திரனின் விரைகள் அந்த இடத்தி லேயே கீழே விழுந்து விடுகின்றன. பிறகு இந்திரன் அக்னி தேவ னிடம் சென்று “"கடவுளர்களுக்காகவே (?) இப்படி ஒரு காரியத் தைச் செய்தேன்…’’என்று முறையிட, ஒரு செம்மறி ஆட்டுக் கிடாவின் விரைகளைப் பிடுங்கி அவனுக்குப் பொருத்தி சரி பண்ணிவிடுகிறார் அக்னி.
கம்ப ராமாயணத்திலோ, கவுதமரின் உருவம் தாங்கி வரு வது இந்திரன் என்பதை அறியாதவளாக இருக்கிறாள் அகலிகை. அவன் உறவில் ஈடுபடும் போதுதான் வித்தியாசத்தை உணர் கிறாள். ஆனாலும், இந்திரனின் மாயவலையில் சிக்குண்டு சிற்றின்பம் காண்கிறாள். பெண்ணுறுப்பின் மீது கொண்ட வெறி யினால்தானே இப்படி ஒரு தவறைச் செய்தான் இந்திரன் என்ற கோபத்தில் “"உன் உடல் முழுவதும் ஓராயிரம் யோனிகள் தோன் றட்டும்…’’என்று சாபம் விடுகிறார் கவுதம மகரிஷி. பிறகு தேவர் களின் முயற்சியில், பெண்ணுறுப்புக்கள் அத்தனையும் கண்களாக மாறி, ஆயிரம் கண்கள் உடையவன் ஆகிறான் இந்திரன். நூல் ஒன்றுதான். அதற்காக, ஊடும், பாவும், நெருக்கமும், அழுத்தமும், வண்ணங் களும், டிசைன்களும் வெவ்வேறாக இருக்கின்ற துணிகளை ஒரே துணி என கருத்தில் கொள்ள முடியுமா? ராமாயணக் கதைகளும் அப்படித்தான் இருக்கின்றன.
உறவு முறைகளில் வெவ்வேறாக முரண்படுகின்ற கதைகள் உண்டு. ராமனையும் சீதையையும் அண்ணன் – தங்கையாக சித்தரிக்கிறது பௌத்த ராமாயணம். சமணர்களோ தங்களின் ராமாயணத்தில் ராவணனின் மகள் சீதை என்கிறார்கள். சமணர்களும், தாய்லாந்து நாட்டினரும் ராவணனுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். உயர்ந்த குணா ளனாகச் சொல்கின்றனர். போர்க்களம் மற்றும் யுத்தத்தை முன் னிறுத்தி வீர, தீர, சாகசங்கள் நிறைந்த கதையாகப் படைத்திருக் கின்றனர். சமஸ்கிருதத்திலும், தமிழிலும் ராமனைக் கொண்டாடு கின்றனர்.
#SangathamizhanTV #300Ramayanam #RamanVsRavanan #Ramayanam #TamilsPrideRavanan #LandOfRavana
***************************************************************************************
For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV: / @sangathamizhantv
Email ID: [email protected]
Join this channel to get access to perks:
/ @sangathamizhantv
Follow me on Facebook Page: / changatamizhan
Информация по комментариям в разработке