கால்நடை மற்றும் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் மூன்று ரகத்தில் இருக்கிறார்கள். ஒன்று வருமானத்திற்காக வளர்ப்பவர்கள், சண்டைக்காக வளர்ப்பவர்கள், கௌரவத்திற்காக வளர்ப்பவர்கள். இந்த மூன்று நபர்களையும் தாண்டி, காதலுக்காக மட்டுமே வளர்ப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் விற்பதும் இல்லை, சண்டைக்கும் விடுவதுமில்லை, கௌரவத்தையும் பார்பதில்லை. காசசை செலவு செய்து அதை வாங்கி வளர்த்து அழகு பார்ப்பார்ப்பார்கள். கவலை மறப்பார்கள்.
கௌரவம் என்பது இங்கு வேறு ஒன்றுமில்லை. கால்நடைகளுக்குத் தேவையான உணவு முதல் அதன் கழிவுகள் வரை அனைத்தையும் அவர்களே செய்வது. அப்படிபட்ட ஒருவர்தான் திரு.தினகரன் அவர்கள். மதுரை பழங்கானநத்தம் பகுதியில் வசிக்கும் இந்த இளைஞர், எம்.பி.ஏ., பட்டப்படிப்பு படித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே, ஆடு, மாடு, கோழி, புறா, ஜல்லிக்கட்டு காளை, குதிரை என தனது ஜமீன் பண்ணையில் எல்லாவற்றையும் வளர்த்து வருகின்றார்.
நிஜமாகவே எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒருவர் எப்படி இத்தனையையும் வளர்க்க முடியும் என்று. காதல் இருந்தால் எதுவும் சாத்தியம் தானே. அதைதான் செய்து காட்டியுள்ளார் தினகரன் அவர்கள். தான் சிறு பிள்ளையாக இருக்கும் பொழுதே வீட்டில் புறாக்களும், கோழிகளும், கிடாய்களும் இருந்தது என்றும், தனது உறவினர்கள், ஆடு, மாடு வளர்ப்பைச் சேர்ந்த தொழில்களை செய்து வருகின்றனர் என்றும், விவசாயம்தான் எங்கள் பூர்வீகத் தொழில் என்று கூறும்போது அவருக்குள் அத்தனை மகிழ்ச்சி.
தான் எவரையும் ஏமாற்றக்கூடாது என்பதில் திண்ணமாக இருக்கும் இவரை, பலரும் ஏமாற்றியுள்ளனர். அதேபோல் தனக்காக எதையும் செய்யும் நல்ல உள்ளங்களும் உள்ளனர் என்றும் கூறியுள்ளார். மற்றவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி தனக்குப் பிடித்த கால்நடைகளை தனது வீட்டாரின் அனுமதியோடு வளர்த்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், குதிரை, முட்டு கிடாய், சண்டை சேவல், புறா, குட்டை மாடு, ஜல்லிக்கட்டு காளை என எல்லாமே வளர்ப்பது பிடிக்கும், இதுக்கு முன்னாடி நிறையா வச்சு இருந்தேன். தற்போது அளவை குறைச்சுக்கிட்டேன் சார். அளவுக்கு மீறி இனப்பெருக்கும் ஆகும் பட்சத்தில் அதை எனது நண்பர்களுக்கும், வளர்க்க ஆசைப்படுபவர்களுக்கும், இலவசமாக கொடுப்பதுதான் என் வழக்கம். விலைக்கு கொடுத்தா அது எனக்கும் சரி, வாங்குற அவுங்களுக்கும் சரி, நல்லா இருக்காது. ஏன்னா நான் செய்த செலவுக்கு அவுங்க கொடுக்கும் விலை ஈடாக இருக்காது. அந்த காரணத்தால் விற்பது இல்லை சார்.
முக்கியமா கால்நடைகளை வாங்குவது பெரிசு இல்ல சார். அதற்கு ஏதாவது நோய் வந்துட்டா, அதைக் காப்பாத்துவதுதான் ரொம்ப கஷ்டம். அது குறித்த மருத்துவம் கட்டாயம் தெரிஞ்சு வச்சுக்கணும். அதை எப்பொழுதும் கவனமாக பார்த்துக்கணும். அப்படி ஒவ்வொன்னுக்கும் அதற்கு ஏற்படக் கூடிய நோய்கள், அதற்கான மருந்துகள் குறித்து தெரிஞ்சுவச்சுருக்கேன். அதை பலருக்கும் சொல்லியும் கொடுக்குறேன். சில நேரம் வளர்ப்பு புறாக்கள், கோழிகள் உணவுக்காக பயன்படுத்துவது உண்டு. அது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டும்.
என்னபோலவே என் அக்கா பைனும் வளர்ப்பில் ஆர்வமா என்னோடு இருக்கான். அதேபோல கூட ஒரு தம்பிகளும் இருக்காங்க. இவுங்கதான் எனக்கு பக்கபலம். இவுங்க இல்லைனா நான் வளர்ப்பது ரொம்ப கஷ்டம். என்னுடைய வாழ்க்கை முழுவதும் கால்நடை வளர்ப்பும், செல்லப்பிராணிகள் வளர்ப்பும் இருந்துகிட்டே இருக்கும். அதுவும் நானும் வேறு இல்ல. இந்த ஜென்மத்துல மற்ற உயிர்களிடம் அன்பு காட்டுவதில் பெரிய ஆத்ம திருப்தி இருக்கு சார். எனக்கு என்ன மனக்குறைனாலும் இங்க வந்து இதுகல பார்த்தக்கா கவலை எல்லாம் மறந்து பறந்து போயிடும். தினமும் காலையில 5 மணிக்குலாம் இங்க வந்துருவேன். அப்புறம் என்ன போக மனசே இருக்காது என்றார் தினகரன் குழந்தையாக.
கால்நடை மற்றும் செல்லப்பிராணிகள் குறித்த எங்களுடைய பயணம் தினகரன் அவர்களுடன் இன்னும் நீளும் என்ற நம்பிக்கை உடனேயே எங்களுக்கு வந்துவிட்டது. கடைசியாக நாட்டுக் கோழி முட்டைகளை நாங்கள் கேட்காமேல எங்களிடம் கொடுத்தார். அதை பார்த்ததும் எங்க வீட்டுல இருந்த நாட்டுக் கோழிகள் ஞாபகம் வந்துருச்சு.
மதுரை ஜமீன் பண்ணை என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் இவர்களுடைய பண்ணையை வீடியோ பதிவு செய்த மகிழ்ச்சியோடு நாங்கள் அங்கிருந்து கிளம்பிளோம்.
திரு.தினகரன் தொலைபேசி எண்: 84899 33969
நன்றிகள் !!
_________________________________________________________
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
💓 App Link: https://play.google.com/store/apps/de...
💓 Facebook : / maduraivideo
💓web site : https://hellomaduraitv.com/
💓web site : https://hellomadurai.in/
💓web site : https://tamilvivasayam.com/
💓 Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________
Информация по комментариям в разработке