மயூர பந்தம் | பகையை துரத்தும் | சகல பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது | Mayura Bandham | 27 times

Описание к видео மயூர பந்தம் | பகையை துரத்தும் | சகல பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது | Mayura Bandham | 27 times

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய மயூர பந்தம்

27 முறை பாராயணம் செய்யும் வடிவில்

வரதந திபநகர சுமுக வொருகுக வறிதுதபு விரிவிதி
மரகத வரிபரம துகளி லசலவி மலமழ வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி
விபுதகுரு சுரபதி நவரச பரததி நகரம துகமழ முனிவருதி

(பதம் பிரித்தது)
வர தந திப நகர சுமுக ஒரு குக வறிதுதபு விரி விதி
மரகதஅரி பரம துகள்இல் அசல விமல மழவென அல் இரிய
மரபு உறு குறுமுனிவர் உதிமயல் அசர மதி விரி விபுதகுரு
சுரபதி நவரச பரத திநகர மதுகமழ முனி வருதி.

பொருள்:
வர தந - வரத்தையும் தனத்தையும் உடைய
திப நகர - பிரகாசமயமான நகரத்தானே
சுமுக - நன்முகமுடையவனே
ஒரு குக - ஒப்பற்ற குகனெனும் காரணப் பெயருடையோனே
வறிதுதபு விரி விதி -குறைவற்ற பெரும் தொழிலோனே (புகழோடையோனே)
மரகதஅரி - பச்சை நிறமுள்ள தேராகு மயில் வாகனத்தின்
பரம - கடவுளே (பச்சை மயிலின் மீது அமர்ந்து வரும் முருக பெருமானே )
துகள் இல் - குற்றமில்லாத
அசல விமல - அழுக்கில்லாதவனே
மழை என அல் - அறிவு முதிர்ச்சி இல்லாத எனது (ஆணவ )இருளானது
இரிய - கெடும்படி
மரபு உறு - பாரம்பரியமான பெரியார் தன்மை உற்ற
குரு முனிவர் - அங்குஷ்ட அளவான அகஸ்திய மாமுனிவர்க்கு
உதிமயல் - உதித்த மயக்கத்தையும்
அசர மதி - சுவாசம் இல்லாத யோக அறிவையும்
விரி- விளங்கச் சொல்லி அருளிய
விபூத குரு - பேரறிவாளனான ஆசிரியனே
சுரபதி - தேவர்களின் தலைவனே
நவரச பரத -ஒன்பது ரசம் உள்ள நாடக நாயகனே
திநகர- ஞான சூரியனாகவும் விளங்குவோனே
மதுகமழ முனி -இனிமையான மாறா விளநலமுள்ள முனிவடிவுடையானே
வருதி - வந்தருள்வாயாக

Комментарии

Информация по комментариям в разработке