கதவு | சிறுகதை | கி.ராஜநாராயணன் | Classic Tamil Short Stories

Описание к видео கதவு | சிறுகதை | கி.ராஜநாராயணன் | Classic Tamil Short Stories

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (பிறப்பு:16 செப்டம்பர் 1922), கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர்.

கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, தொண்ணூறு வயதான கி.ரா. தற்போது புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது.

எழுத்தாளரின் படைப்புகளைப் பெற
https://tinyurl.com/ydezfws5

நல்ல எழுத்தாளர்களும், எழுத்தும், படைப்புகளும் இன்னும் நிறைய பேரைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இதை ஒலிப்பதிவு செய்து பதிவேற்றுகிறேன். காப்புரிமை எழுத்தாளருக்கே உரித்தானது.

#சிறுகதைகள் #கதைகள் #இலக்கியம் #கி.ரா #Ki.Rajanarayanan #Tamilshortstories #shorttamilstories #classictamilstories

Комментарии

Информация по комментариям в разработке