அம்பேத்கரும் காங்கிரஸ் கட்சியும்

Описание к видео அம்பேத்கரும் காங்கிரஸ் கட்சியும்

அம்பேத்கருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இருந்த பிரச்சனைகளைப் பற்றி இப்போது பாரதிய ஜனதா கட்சி வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. நேரு அவர்கள் எப்படி அம்பேத்கரை இரண்டு முறை தோற்கடித்தார் என்பதைப் பற்றியும் அதற்குப் பிறகு வந்த காங்கிரஸ் கட்சிகள் தங்கள் ஆட்சியில் அம்பேத்காரை எப்படி அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதை பற்றியும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கும் அம்பேத்காருக்கும் இடையில் பிரச்சினைகள் இருந்தது உண்மைதான். ஆனால் இந்தியாவை கட்டமைக்கும் முயற்சியில் நேரு காந்தியடிகள் அம்பேத்கர் மூவரும் ஒன்றிணைந்து செயல்பட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மூவரும் மூன்று கருத்துக்களை உட காந்தி அவர்கள் சாதிய வலிமை களுக்கு முன்னுரிமை கொடுத்து போராடி வந்தார். அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட நலிந்த மக்களுக்காக சாதிய அடையாளங்களுக்கு இட ஒதுக்கீடு இருந்து ,அதன் வழியாக அவர்களை உயர்த்திக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தார். ஆனால் நேரு அவர்கள் சோஷலிச பொருளாதாரத்தை முன்னிறுத்தி அதன் வழியாக நாட்டை நாட்டு மக்களை உயர்த்தலாம் என்று நம்பி இருந்தவர். இப்படி மூன்று கருத்துக்கள் உடைய இவர்கள் இந்திய நாட்டை கட்டுக்கோப்பாக அமைத்து நமக்கு தந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. ஆனால் ஆர்எஸ்எஸ் சங்கு பரிகார பாஜக அமைப்புகளுக்கு அம்பேத்கர் எப்போதும் விரோதியாகவே இருந்து வந்திருக்கிறார். அதன் உச்சம் தான் அமித்ஷா அவர்களின் இந்த கேலிக்கூத்தான அம்பேத்காரை பற்றிய கிண்டல் தனமான பேச்சு, எப்போதும் இவர்களுக்கு அம்பேத்கர் ஐயோ அல்லது அவர் அமைத்துத் தந்த அரசியலமைப்புச் சட்டத்தையோ ஏற்க மனம் இருந்ததில்லை

Комментарии

Информация по комментариям в разработке