சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தேர் திருவிழா.

Описание к видео சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தேர் திருவிழா.

சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் கிராமத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் தேர் திருவிழா பல்வேறு கிராமங்களில் இருந்து திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயில் திருவிழா
கோவிலில் தேர் திருவிழா நடைபெறுவது கடந்த மாதம் 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில்
தினமும் தொடர்ந்து பாரதம் பாடப்பட்டு பால்குடம் எடுத்தல், சாமி ஊர்வலம், பொங்கல் வைத்து வழிபாடு செய்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று சக்தி அழைக்கப்பட்டு தேரோட்டம்
நடைபெற்றது
முன்னதாக திரௌபதி அம்மன் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருளி
மகா தீபாராதனை காமிக்கப்பட்டு
திருத்தேர் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பிள்ளையார் கோயில் வந்தடைந்தது,
22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த தேர் திருவிழாவில் சுற்றுவட்டார் கிராமங்களான நெடுமானூர், சோழம்பட்டு, தாவடிப்பட்டு, கரடிசுத்தூர், பொய்குனம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


#sankarapuram
#kallakurichi

Комментарии

Информация по комментариям в разработке