திருமந்திரம் பாடல் எண் - 108 (August 14 2013)

Описание к видео திருமந்திரம் பாடல் எண் - 108 (August 14 2013)

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன் தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றானே.

விளக்கம்:
அழிவில்லாத தன்மை கொண்ட தேவர்கள் நிறைந்த திருச்சபையில், பால் போன்ற மேனி கொண்ட அந்த சிவபெருமானைப் பணிந்து வணங்கினேன். அந்த சிவபெருமான் "நீ திருமாலுக்கும் பிரமனுக்கும் ஒப்பாவாய்! மண்ணுலகில் உள்ள மக்களுக்கெல்லாம் எம் திருவடியின் சிறப்பை எடுத்துச் சொல்!" என்றான்.

(ஒலக்கம் - திருச்சபை, உலப்பிலி - அழிவில்லாத, ஞாலம் - பூமி)

Комментарии

Информация по комментариям в разработке