திருமூலர் திருமந்திரம் பாடல் 40 பொருள் விளக்கம் .thirumoolar thirumanthiram padal 40

Описание к видео திருமூலர் திருமந்திரம் பாடல் 40 பொருள் விளக்கம் .thirumoolar thirumanthiram padal 40

சர்வம் சிவமயம் telegram channel join-: https://t.me/+iJDdf0k73uszYmVl


திருமூலர் திருமந்திரம் பாடல் 40 பொருள் விளக்கம்-:

பாயிரம் - 1. கடவுள் வாழ்த்து
பாடல் #40: பாயிரம் - 1. கடவுள் வாழ்த்து
குறைந்தடைந் தீசன் குரைகழல் நாடும் நிறைந்தடை செம்பொனின் நேரொளி ஒக்கும் மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப் புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே.
விளக்கம்:
தூய்மையான ஒளி நிறைந்த பொன்னை புடம் போட்டால் கிடைக்கும் பிரகாசத்தைப் போன்ற பேரொளியை உடைய இறைவனை உயிர்கள் தங்களின் குறைகளை உணர்ந்து தாழ்மையோடு பெருமைக்குரிய இறைவனின் திருவடிகளைத் தேடிச் சரணடைந்து நெஞ்சில் வஞ்சமின்றி ஆணவமின்றி போற்றிப் புகழக்கூடியவர்களின் உள்ளத்துள் இறைவன் மகிழ்வோடு வந்து நின்று அவர்களை எப்போதும் பாதுகாத்து அருளுவான்.

Комментарии

Информация по комментариям в разработке