Narikuravar Issue: கதவில்லாத வீடுகள்; CM Stalin Visit-க்கு பின்பு நிலை மாறியதா? Ground Report

Описание к видео Narikuravar Issue: கதவில்லாத வீடுகள்; CM Stalin Visit-க்கு பின்பு நிலை மாறியதா? Ground Report

Narikuravar Issue: தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆன போது, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஒரு சம்பவம் நடந்தது.

மாமல்லபுரம் ஸ்ரீதலசயனப்பெருமாள் கோவிலில் அன்னதானம் சாப்பிட அமர்ந்த நரிக்குறவ பெண்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். 'அரசாங்க கோவில்ல ஒன்னா உட்கார்ந்து சாப்பிடக் கூடாதா?' என அவர்கள் பேசும் காணொளி வைரலானது.

அரசின் மீதான விமர்சனமாக இது பார்க்கப்பட்டதால், நரிக்குறவ பெண் அஸ்வினியின் வீட்டுக்கு அதே ஆண்டு நவம்பர் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வருகை தந்தார்.

நரிக்குறவ மக்களின் வீடுகளில் தேநீர் அருந்தியதோடு, 283 பேருக்கு நலத்திட்ட உதவிகள், வீட்டு மனைப்பட்டா, சாதி சான்றிதழ்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். ஆனால், அதன் பின் அவர்களின் வாழ்க்கை மாறியதா?

Tamil Nadu Chief Minister M.K. Stalin visited the homes of the Narikuravar community in Pooncheri village near Thirukkazhukundram in Chengalpattu district in 2021 and provided housing grants and other welfare assistance. Have their lives changed since Stalin's visit?

Reporter - Vijayanand
Shoot Edit - Thomas


இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#MKStalin #House #Narikuravar

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

Комментарии

Информация по комментариям в разработке