பாவம் தீர மந்திரம் - அகத்தியர் அருளியது | பாவம் போக்கும் மந்திரம் | பாவங்கள் விலக | Pavangal Theera

Описание к видео பாவம் தீர மந்திரம் - அகத்தியர் அருளியது | பாவம் போக்கும் மந்திரம் | பாவங்கள் விலக | Pavangal Theera

Pavangal Theera Manthiram - Agathiyar Manthiram Tamil

பாவம் தீர மந்திரம் - அகத்தியர் அருளியது, பாவம் போக்கும் மந்திரம், பாவங்கள் விலக, பாவங்கள் தீர பரிகாரம், பாவம் தீர பரிகாரம், செய்த பாவங்கள் தீர மந்திரம்

அகத்தியர் பரிபூரணம் - பாடல் 677

காணவே யின்னமொரு சூட்சங்ககேளு
கருணையுட னுலத்தோடி ருக்கும்போது
பூணவே கண்ணாரக் கண்டபாவம்
புத்தியுடன் மனதாரச் செய்தபாவம்
பேணவே காதாரக் கேட்டபாவம்
பெண்வகைகள் கோவதைகள் செய்தபாவம்
ஊணவே பலவுயிரைக் கொன்றபாவம்
ஒருகோடி பாவமெல்லா மொழியக்கேளே.

அகத்தியர் பரிபூரணம் - பாடல் 680

பாரப்பா யின்னமொரு மந்திரசூட்சம்
பக்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
காரப்பா கருணைவிழி மனக்கண்ணாலே
காலறிந்து யோகமதால் அங்லங்கென்று
நேரப்பா நிலையறிந்து நிலையில்நின்று
நீ மகனே நூற்றெட்டு உருவேசெய்தால்
வீரப்பா கொண்டுயிரைக் கொண்டபாவம்
வெகுகோடி பாவமெல்லாம் விலகுந்தானே.

அகத்திய பெருமான்

உடல் மற்றும் மன சுத்தியுடன் சுத்தமான இடத்தில் ஒரு சுத்தமான விரிப்பின் விரித்து மேல் அமர்ந்து மனதை ஒரு நிலை படுத்தி மனதினுள் "ஓம் அங் லங்" என்ற மந்திரத்தை 108உரு செபிக்க வேண்டும்.இப்படி செபிப்பதால் உயிரைக்கொன்ற பாவம் முதல் எப்படிப்பட்ட கொடியபாவங்களும் விலகி விடும் என்கிறார் அகத்திய பெருமான்.

இதில் மந்திரம் என்ன என்று பாத்தீங்கன்னா அங் லங், நாம் பல பதிவுகளில் ஏற்கனவே சொன்ன மாதிரி அகத்திய பெருமான் மந்திரம் அனைத்திற்கும் அகத்திய பெருமானின் அறிவுரை படி "ஓம்" என்ற அட்சரதை மந்திரத்தின் முன்னால் சேர்க்க வேண்டும் எனவே "ஓம் அங் லங்" என்பதே நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரம்.

இந்த பாடலில் அகத்திய பெருமான் எந்த திசையில் அமரவேண்டும், எந்த நேரத்தில் ஜெபிக்க வேண்டும், எத்தனை நாட்கள் ஜெபிக்க வேண்டும் என்பதை பற்றி குறிப்பிட வில்லை, எனவே பல பாடல்களில் அகத்திய பெருமான் குறிப்பிட்டுள்ள அந்தி சந்தி வேலையில் இதை கிழக்கு திசை நோக்கி அமர்ந்து தினமும் 108 முறை ஜெபிக்கலாம்(அதவாது மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM)

#aalayamselveer #pavangaltheera #agathiyarmanthiram

Комментарии

Информация по комментариям в разработке