முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருக்கும் முறை | 48 days fasting and worship method for Murugan

Описание к видео முருகனுக்கு 48 நாட்கள் விரதம் இருக்கும் முறை | 48 days fasting and worship method for Murugan

#Muruga #murugan #முருகன் #முருகா
முருகப் பெருமானுக்கு சஷ்டி, தைப்பூசம், வைகாசி விசாகம் போன்று வரும் விரத நாட்கள் மட்டுமல்லாது தொடர்ந்து 48 நாட்கள் விரதம் இருக்கும் முறையினைப் பற்றி இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார்கள்


திருப்புகழ் 1:
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயல்தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த அதிதீரா

அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த பெருமாளே.

திருப்புகழ் 2:
நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே

வேல்கொண்டு வேலைப்பண் டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா
நாலந்த வேதத்தின் பொருளோனே
நானென்று மார்தட்டும் பெருமாளே.

அலங்காரம் - 1
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.

நூற்பயன் - 1
சலம் காணும் வேந்தர்தமக்கும் அஞ்சார் யமன்சண்டைக்கு அஞ்சார்
துலங்கா நரகக்குழி அணுகார் துட்ட நோய் அணுகார்
கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும் கந்தன் நன் நூல்
அலங்காரம் நூற்றுள் ஒருகவிதான் கற்று அறிந்தவரே.

பதிகம்
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தில் வாழ்வே!

வேல்மாறல்
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும்

பனைக்கமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும்

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும்

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும்

சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
இடுக்கண்வினை சாடும்

சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும்

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கோர்துணை யாகும்

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
மறத்தைநிலை காணும்

தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும்

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும்

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும்

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும்

திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும்

திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும்

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும்

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே

ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке