navratri 2022 |கொலு பொம்மை | |navratri golu dolls | நவராத்திரி | மயிலாடுதுறை |Mayiladuthurai |

Описание к видео navratri 2022 |கொலு பொம்மை | |navratri golu dolls | நவராத்திரி | மயிலாடுதுறை |Mayiladuthurai |

#navratri
#tamilnews
#golu
#mayiladuthurai
#navratrispecial
#navratristatus
#navratri2022
#navratri2022
#navratribhajan
#navratri_status
#navrathiri
#opentalktamil
#தமிழ்செய்திகள்
#londontamilnews
#tamilnadu
#ustamilnews
#தமிழ்நாடு
#londontamil
#nammatrichy
#chennai
#நவராத்திரி
#நவராத்திரி2022
#கொலுபொம்மைகள்
#கொலு
#மயிலாடுதுறை
#ஆன்மீகம்தகவல்தமிழில்
#ஆன்மீகம்தகவல்
#ஆன்மீகம்


மயிலாடுதுறை: 18 -09-2022


வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மயிலாடுதுறை கொலு பொம்மைகள்..!

மயிலாடுதுறை நகரில் முருகேசன் கைவண்ண கலைக்கூடத்தில் நான்கு தலைமுறைகளாக பாரம்பரிய முறைப்படி கொழு பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.


மயிலாடுதுறையில் மூன்று தலைமுறையாக குடிசைதொழிலாக செய்யப்பட்டு வந்த கொலு பொம்மைகள் உற்பத்தி தொழிலை, தற்போது 4 -ம் தலைமுறை பட்டதாரி இளைஞரான ஆனந்தகுமார், விரிவுபடுத்தி அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இவர், தான் தயாரிக்கும் கொலு பொம்மைகள், மண் சிற்பங்கள் ஆகியன தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் அனுப்பி வருகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக வைரஸ் தொற்று காரணமாக நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படாத நிலையில், இந்த ஆண்டு நாடெங்கும் வெகு விமர்சையாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.

நவராத்திரியையொட்டி இந்தாண்டு இவர் தயாரித்துள்ள பல்வேறு வகையான செட் கொழு பொம்மைகள் அமோகமாக விற்பனை ஆகி வருகின்றன.

மேலும், கிருஷ்ண பெருமானின் தசாவதாரம் பொம்மைகள், கடவுள், தேசத் தலைவர்கள், விலங்கு, பறவைகளின் பொம்மைகள், உடற்பயிற்சியின் அவசியத்தை பெண்களுக்கு உணர்த்தும் பொம்மைகள், கிரிக்கெட் விளையாட்டு உள்ளிட்ட பல வகையான பொம்மைகள் விற்பனைக்காக தயாரிக்கப்பட்டுள்ளன.


பாரம்பரிய முறைப்படி மண்களால் தயாரிக்கப்படும் கொலு பொம்மைகள் மயிலாடுதுறை பகுதியில் மிகவும் வரவேற்பை பெற்று, தற்போது உலக அளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Комментарии

Информация по комментариям в разработке