திருவாதிரைகளி : திருமதி. ரேகா சந்தோஷ் & குழுவினர், மாதங்கி திருவாதிரை, பெருந்தாந்நி. திருவனந்தபுரம்

Описание к видео திருவாதிரைகளி : திருமதி. ரேகா சந்தோஷ் & குழுவினர், மாதங்கி திருவாதிரை, பெருந்தாந்நி. திருவனந்தபுரம்

திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா நாளை (31 ந் தேதி ) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை நிர்மால்யம், ஸ்ரீ பூத பலியைத் தொடர்ந்து காலை 8.45 மணியில் இருந்து முதல் 9.45 மணிக்குள் திருக்கொடியேற்றப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு பஞ்சாரி மேளம், இரவில் சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.
2. ம் நாள் (நவ. 1ந் தேதி) காலை 8 மணிக்கு நவநீதம் நாராயணியம் சமிதி வழங்கும் நாராயணீய பாராயணம், இரவு 7 மணிக்கு திருவாதிரைக் களி, 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி, 10 மணிக்கு ருக்மணி சுயம்வரம்கதகளி, 3ம் நாள் ( நவ.2 ந் தேதி) காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், 9 மணிக்கு நாராயணீய பாராயணம், இரவு 7 மணிக்கு டான்ஸ், இரவு 9மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், 10 மணிக்கு தேவயானி சரிதம் கதகளி ஆகியவை நடக்கிறது. நான்காம் நாள் (நவ.3ந்தேதி) இரவு .7.30 மணிக்கு பஜனை, இரவு 9 மணிக்கு சுவாமி பல்லக்கு வாகனத்தில் பவனி வருதல் ஆகியனவும் 5ம் நாள் (நவ.4 ம் தேதி) காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு 7 மணிக்கு பரத நாட்டியம், இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றமும் 9 மணிக்கு கருட வாகனத்தில் சாமி பவனியும், 10 மணிக்கு கீசகவதம் கதகளி ஆகியவையும் நடக்கிறது. 6.ம் நாள் (நவ.5. ம் தேதி) காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு ணிக்கு பரத நாட்டியம் ,இரவு 9.30 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு அய்யப்ப சரிதம் கதகளி ஆகியன வும்
7. ம் நாள் (நவ.6. ம்தேதி) காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு 9 மணிக்கு சாமி பல்லக்கில் பவனியும், தொடர்ந்து சீதா சுயம்வரம்கதகளி ஆகியவை நடைபெறுகிறது.
8. ம் நாள் (நவ.7. ந் தேதி) இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு துரியோதன வதம் கதகளி 9. ம் நாள் (நவ.8.ந்தேதி) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ராமாயண பாராயணம், இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, 9.30 மணிக்கு சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியன நடக்கிறது. 10ம் நாள் (நவ 9. ந் தேதி) காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக் கச்சேரி, இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு சுவாமிஎழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

Комментарии

Информация по комментариям в разработке