1228.Jannat Ka Mahal...!

Описание к видео 1228.Jannat Ka Mahal...!

தமிழ் மொழி பெயர்ப்பு (Tamil Translation).1228

(Jannat Ka Mahal...!)
சுவனத்து மாளிகை...!

ஒரு சம்பவத்தைக் கேளுங்கள். மேலும், இது மிகவும் மகிழ்ச்சிகரமான சம்பவமாகும். பெரும்பாலும் நான் அதிகமான சம்பவங்களைக் கூறுவதில்லை. ஆனால், இந்த சம்பவத்தை உங்களிடம் கூறுவதை மிக அவசியமாக நான் கருதுகிறேன். இந்த சம்பவத்தை மறந்துவிடாதீர்கள். இந்த சம்பவமானது அஹ்லே சுன்னத்தின் அடையாளமாகும். ஆமிரிகளான நம் அடையாளமாகும். இந்த சம்பவமானது சம்பவம் அல்ல. மாறாக, இது நம்முடைய செல்வமாகும். இது நம்முடைய கொள்கைக்கான சான்றிதழாகும். இது ஹழ்ரத் புஹ்லூல் தானா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களின் மிக முக்கியமான சம்பவமாகும். இவர்கள் கலீஃபா ஹாரூன் ரஷீத் காலத்தில் வாழ்ந்த ஒரு நிறைவான (மஜ்தூப்) தீவிர இறைநேசர் ஆவார்கள்.

2. ஒரு முறை ஹழ்ரத் புஹ்லூல் தானா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் ஈரமான ஆற்று மண்ணில் மணல் வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் மணல் வீடு கட்டுவார்கள் அல்லவா!. அது போன்று இவர்கள் மண்ணில் ஒன்று முதல் ஐந்து வரை மணல் வீடு கட்டிக் கொண்டிருந்தார்கள். கலீஃபா ஹாரூன் ரஷீத் தன்னுடைய மனைவி ஜுபைதா காத்தூனுடன் சென்று கொண்டிருந்தார்கள். ஜுபைதா காத்தூன் என்பவர் இறை அச்சமுள்ள பெண்மணியாகவும், ஷரீஅத்தைப் பேணி நடக்கின்ற பெண்மணியாகவும் இருந்தார்கள். அரசியாகவும் இருந்தார்கள். ஆனால், அவர்களின் உள்ளமோ ஃபக்கீரைப் (ஏழையைப்) போன்று மிக பணிவுடையதாக இருந்தது.

3. தன்னுடைய கணவருடன் ஜுபைதா சென்றுக் கொண்டிருக்கும் போது புஹ்லூல் தானா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் மணல் வீடு கட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் அருகில் இருவரும் சென்று ஜுபைதா இறைநேசரிடம், "ஹழ்ரத் அவர்களே! தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?" என்றுக் கேட்டார். அதற்கு ஹழ்ரத் அவர்கள், "நான் வீடு கட்டிக் கொண்டிருக்கின்றேன்" என்றார்கள். ஜுபைதா, "இது என்ன வீடு?" என்று வினவினார்கள். அதற்கு ஹழ்ரத் அவர்கள், "இவை சுவனத்தின் மாளிகைகளாகும்" என்றார்கள். ஜுபைதா அவர்கள், "இந்த வீடுகளை தாங்கள் விற்பனை செய்வீர்களா?" என்றுக் கேட்டார்கள். ஹழ்ரத் அவர்கள், "ஆமாம். இவற்றை விற்பதற்காகவே கட்டிக் கொண்டிருக்கின்றேன். இந்த வீட்டிற்கான விலையை நீங்கள் கொடுத்தால் உங்களுக்கு விற்பனை செய்வேன்" என்றார்கள்.

4. அன்பர்களே! இறைநேசர்களுடனான தொடர்பை நினைத்து மகிழ்ச்சியடையுங்கள். இறைநேசர்களின் உயர்வு என்ன என்பதைப் பாருங்கள். சுவனத்து மாளிகையை இந்த துன்யாவிலேயே விற்பனை செய்கின்றார்கள். எதனடிப்படையில் விற்பனை செய்கிறார்கள்.
مَنْ لَهُ الْمَوْلَي فَلَهُ الْكُلُّ
"மல்லஹுல் மௌவ்லா ஃபலஹுல் குல் - இறைவன் யாருக்கு சொந்தமாகிவிட்டானோ, அவருக்கு எல்லாமே சொந்தம்".
சுவனத்தின் மாளிகை என்ன பெரிய விஷயம்!. அல்லாஹ்வே இவர்களுக்கு சொந்தமாகிவிட்டான், முஸ்தஃபா (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களே இவர்களுக்கு சொந்தமாகிவிட்டார்கள். ஹழ்ரத் புஹ்லூல் தானா (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்களுக்கு சொந்தமாகிவிட்டார்கள்.

5. ஜுபைதா அவர்கள், "ஒரு வீட்டின் விலை என்ன?" என்றுக் கேட்டார்கள். ஹழ்ரத் அவர்கள், "ஒரு வீட்டின் விலை நாலணா. நீங்கள் எத்தனை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்" என்றார்கள். ஜுபைதா அவர்கள் நாலணாவை ஹழ்ரத்திடம் கொடுத்தார்கள். ஹழ்ரத் அவர்கள் நாலணாவைப் பெற்றுக் கொண்டு, ஒரு மணல் வீட்டின் மீது "ஹாதா லி ஜுபைதா சவ்ஜி ஹாரூன் ரஷீத் - இது ஹாரூன் ரஷீதின் மனைவி ஜுபைதாவிற்கு சொந்தமானது" என்று எழுதினார்கள். இதனைக் கண்டு கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் இது சுவனத்தின் மாளிகையா! என்று எண்ணி சிரித்தார்கள். பின்னர் கலீஃபா ஹாரூன் ரஷீத் மற்றும் அவருடைய மனைவி ஜுபைதா இருவரும் தங்களுடைய இல்லத்திற்கு சென்றார்கள். அன்றைய இரவு நேரம் வந்தது, இருவரும் உறங்கிவிட்டார்கள்.

6. கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது கனவு கண்டார்கள். கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் சுவனத்தில் உலாவிக் கொண்டிருந்தார். சுவனத்தில் உலாவிக் கொண்டிருக்கும் போது, சுவனத்து மாளிகைகள் பலவற்றைப் பார்த்தார்கள். அவற்றில் ஒரு மாளிகையானது தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. மேலும், அந்த சுவனத்து மாளிகையின் முகப்பில் "ஹாதா லி ஜுபைதா சவ்ஜி ஹாரூன் ரஷீத் - இது ஹாரூன் ரஷீதின் மனைவி ஜுபைதாவிற்கு சொந்தமானது" என்று எழுதப்பட்டிருந்தது. கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் சுவனத்து காவலர்களாகிய வானவர்களிடம், "நான் இந்த மாளிகையினுள் செல்லலாமா?" என்று அனுமதி கேட்டார்கள். அதற்கு வானவர்கள், "இந்த மாளிகையினுள் நுழைவதற்கு ஜுபைதாவிடம் அனுமதி பெற வேண்டும்" என்றுக் கூறி அனுமதி மறுத்துவிட்டார்கள். பின்னர் சுவனத்திலிருந்து வந்துவிட்டார்கள்.

7. கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் உறக்கத்திலிருந்து கண் விழித்தார்கள். ஃபஜ்ர் நேரம் வந்தது. ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள் ஜுபைதாவிடம், "ஜுபைதா! நான் நேற்றிரவு வித்தியாசமான கனவு ஒன்றைக் கண்டேன்" என்றார்கள். அதற்கு ஜுபைதா, "என்ன கனவு கண்டீர்கள்?" என்று வினவினார்கள். அதற்கு கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள், "கனவில் நான் சுவனம் சென்றேன். அங்கு சுவனத்து மாளிகைகள் பலவற்றைப் பார்த்தேன். அப்போது தங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு சுவனத்து மாளிகையைக் கண்டேன். அதன் முகப்பில் 'இது ஹாரூன் ரஷீதின் மனைவி ஜுபைதாவிற்கு சொந்தமானது' என்று எழுதப்பட்டிருந்தது. நான் வானவர்களிடம் அந்த சுவனத்து மாளிகையினுள் நுழைவதற்கு அனுமதி கேட்ட போது, 'இது ஜுபைதாவிற்கு சொந்தமானது. எனவே அவர்களிடம் அனுமதி பெறாமல் நீங்கள் உள்ளே நுழைய முடியாது' என்று அனுமதி மறுத்துவிட்டார்கள்" என்றுக் கூறினார்கள்.

மீதமுள்ள தமிழாக்க தொடர்ச்சியை இதே பதிவின் Comment Box ல் முதல் Comment - ஐ பார்க்கவும்.

Комментарии

Информация по комментариям в разработке