பூலித்தேவர் 309வது பிறந்த நாள் விழா. வாரிசுதாரர்கள் பால் அபிஷேகம் செய்து மரியாதை...

Описание к видео பூலித்தேவர் 309வது பிறந்த நாள் விழா. வாரிசுதாரர்கள் பால் அபிஷேகம் செய்து மரியாதை...

சங்கரன்கோவில் அருகே சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவர் பிறந்தநாள் விழா.வாரிசுதாரர்கள் பால்குடத்துடன் மேளதாள ஊர்வலம் வந்து அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்தனர்... சென்னையில் பூலித்தவருக்கு சிலை நிறுவ வேண்டுமென கோரிக்கை..

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தில் முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 309வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வரிசுதாரர்களான கோமதி முத்து ராணி துரைச்சி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் மேளதாளங்களுடன் பால்குடம் ஊர்வலம் வந்து பூலித்தேவர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கினார்கள்...

இதில் மாவட்ட எஸ்பி சீனிவாசன் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளதால் பலத்த பாதுகாப்பின் நடுவே சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், நெற்கட்டும் செவல் பகுதிகளில் வழியாக செல்லக்கூடிய அனைவரும் காவல்துறையினரின் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்...

சங்கரன்கோவில் அருகே சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலி தேவரின் 309வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதை ஒட்டி மாவட்ட எல்கை சோதனை சாவடிகள் உட்பட 15க்கும் மேற்பட்ட இடங்களில் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 1600 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் எஸ் பி சீனிவாசன் தலைமையில் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்...

Комментарии

Информация по комментариям в разработке