புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே... இந்த மந்திரச் சொல்லை கூற முடியும்...!

Описание к видео புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே... இந்த மந்திரச் சொல்லை கூற முடியும்...!

#தமிழ்விரும்பி#சிந்திக்கலாம்வாங்க

இந்த யூடியூப் சேனல் உங்களுக்கு பிடித்திருந்தால்...
லைக் செய்யுங்கள்..!
ஷேர் செய்யுங்கள்..!
சப்ஸ்கிரைப் செய்யுங்கள்..!
நண்பர்களுக்கு பகிருங்கள்..!
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்..!

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே...

-திருமந்திரம்

முற்பிறவியில் பாவம் செய்த பாவிகள் நாவில்....
'சிவ, சிவ' என்ற மந்திரச் சொல்லை ஒலிக்க மாட்டார்கள்...

'சிவ, சிவ' என சிவனுடைய நாமத்தைச் சொன்னால் நாம் செய்த பாவங்கள் போய் விடும்...

'சிவ, சிவ' எனச் சொல்லி கொண்டே இருந்தால்... மனிதர்களும் 'தேவர்கள்' ஆகலாம்...

'சிவ,சிவ' என சிவன் நாமத்தைச் சொன்னால் சிவப்பேறு கிட்டும்...

எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், சிவபெருமானுடைய நாமத்தைச் சொன்னால், அவை நம்மை ஒன்றும் செய்யாது.

தேவார மூவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் நமசிவாயப் பதிகம் பாடியுள்ளனர்.

"மலையைப் போல பெரிய பாவங்களைச் செய்தவர்களும், சிவபெருமானுடைய திருநாமத்தை இடைவிடாது ஓதி வந்தால், கொடிய வினைகள் யாவும் நீங்கப் பெறுவர். மிகுந்த செல்வச் செழிப்பையும் பெற்று இன்புறுவர்...

"மந்திரம் அன பாவங்கள் மேவிய
பந்தன் அவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமசிவாயவே' 
என்கிறார் ஞானசம்பந்தப் பெருமான்.

பல்லவ மன்னன், அப்பர் சுவாமிகளை சுண்ணாம்பு காளவாயில் இட்டான். நஞ்சு கலந்த சோறை ஊட்டினான். யானையை ஏவி விட்டான். அனைத்திலிருந்தும் தப்பினார். கல்லோடு கட்டி கடலில் வீசினான்.

"சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கை தொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமசிவாயமே' 

என அவர் பாடிய "நமசிவாயப் பதிகம்" அவரைக் காப்பாற்றியது.

மாணிக்கவாசகரும் திருவாசகத்தைத் தொடங்குகிற போதே,

"நமசிவாய வாழ்க"... என்றுதான் தொடங்குகிறார்.

"நற்றவா உனை நான் மறக்கினும்
சொல்லும் நா நமசிவாயவே' என்பது சுந்தரர் வாக்கு...

நாம் முற்பிறவியில் செய்த புண்ணியத்தால்... கிடைத்த மந்திரச் சொற்களை பாராயணம் செய்து வந்தால்... நீங்கள் இப்பிறவியிலேயே சிவப்பு பெற்று பேரானந்த பெருவாழ்வு பெறலாம்...!

திருச்சிற்றம்பலம்

நன்றி 🙏

Комментарии

Информация по комментариям в разработке