இதனால மட்டும் தான் பிரியாணி அதிக சுவை கிடைக்குதுன்னு கிராமத்து மக்களுக்கு தெரியனும் 🙏🫱🏽‍🫲🏻👌👍

Описание к видео இதனால மட்டும் தான் பிரியாணி அதிக சுவை கிடைக்குதுன்னு கிராமத்து மக்களுக்கு தெரியனும் 🙏🫱🏽‍🫲🏻👌👍

வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்காக என் வீடியோ சமர்ப்பணம்.

1. என் முன்னோர்கள் யாரும் சமையல்காரர்கள் கிடையாது. பிரியாணி மாஸ்டர் கிடையாது.

2. சிறுவயதில் பரிமாறும் வேலைக்கு போய் இருந்தேன். அங்கு சமையல் செய்யும் இடத்தில் கொஞ்சம் ஆர்வமாக வேலை செய்தேன்.

3. என் அம்மா நல்லா சமைப்பார்கள். என் வீட்டில் பெண் பிள்ளைகள் கிடையாது. மூன்று ஆண் பிள்ளைகள் எங்க அம்மா சமைக்கும்போது சிறுவயதில் உப்பு காரம் சரியா இருக்கா பாருன்னு சொல்லுவார்கள்.

4. குறைந்த சம்பளத்தில் அதிக சமையல் கலைஞர்களுடன் பணிபுரிந்து இருக்கிறேன். அவர்கள் வேலை நேரத்தில் வேலை செய்வார்கள் தவிர சொல்லித் தர நேரம் இருக்காது. ஒவ்வொரு வேலையும் நாம் செய்யும்போது அதில் உள்ள கஷ்டங்களை தெரிந்து புரிந்து கொண்டால் மட்டுமே சமையல் வேலையை முழுவதுமாக செய்ய முடியும்.

5. நான் தான் நல்ல ஒரு பெரிய சமையல்காரர் என்றும் கூறமாட்டேன். நான் போடும் வீடியோவில் நீங்கள் எனக்கு வேலை தாருங்கள் என்றும் கேட்க மாட்டேன்.

6. நான் எவ்வளவு ஒரு அனுபவத்தில் கஷ்டங்களை உணர்ந்து இந்த சமையல் வேலையை கற்றுக் கொண்டேன். அதேபோல் அளவும் செய்முறையும் வைத்து செய்யலாம் ஆனால் முழுமையான ஒரு சமையலை உருவாக்க முடியாது. கைப்பக்குவம் கலை அப்படி ஒன்று இருக்கு. அதை உணர்ந்து ருசியாக பதமாக பக்குவமாக செய்ய வேண்டுமென்றால் நம் கடினமான உழைப்பில் ஆர்வமான வேலை நாள் மட்டும் தான் உணர முடியும். இதை தான் என் வீடியோ கண்டன்ட்டாக உங்களுக்கு சொல்ல வருகிறேன்.

7. மற்ற உயர்ந்த மனிதர்களையும் சமப்படுத்தி பேசி யார் மனதையும் கஷ்டப்படுத்தவும். குறை சொல்லவும் எப்பவும் நினைக்க மாட்டேன். மனிதர்களுக்கு நாம் எடுத்துச் சொல்லும் விதம் தெளிவாக இருக்க வேண்டும் என்று ஒரு காரணத்திற்காகவே என் youtube சேனல் வீடியோ வில் வார்த்தைகள் சொல்கிறேன். 🙏

8. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு புதிய செய்முறை வித்தியாசமான முறையில் பிரியாணிசெய்யப்படுகிறது. எதுவாயிருந்தாலும் நல்ல ஒரு பிரியாணி அரிசி குவாலிட்டியான அரிசி அதன் கூட சமமான கறி கூடுதலாக கறி சேர்ப்பதன் மூலம் தான் அதிக சுவையான பிரியாணி கிடைக்கிறது.


9. நான் இப்போதைக்கு நல்ல ஒரு எம் என் சி கம்பெனியில் பணிபுரிகிறேன். என் வாழ்க்கைக்கு ஏத்த சம்பளம். இருந்தாலும் எனக்கு சமையல் வேலைகளில். அதிக ஆர்வம் உள்ளது. நான் வளர்ந்து வரும் போது பட்ட கஷ்டங்கள் அனுபவங்கள் அதிகம். அதை தான் வளர்ந்து வரும் மாஸ்டர்களுக்கு நான் சொல்ல வருகிறேன். ஒவ்வொரு பொருள் உடைய பதம் பக்குவம் பார்த்து பார்த்து தான் சமையலை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் அதிக தவறுகள் வரும். எதனால் அந்தத் தவறு ஏற்பட்டது என்று புரிந்து கொண்டு சமைக்க ஆரம்பித்தால் தான் நீங்கள் நல்ல ஒரு பெரிய மாஸ்டராக வர முடியும்.

1 கிலோ அரிசி செய்வதற்கு
1. சீரக சம்பா அரிசி 1 கு 1.1/4 பாத்திரம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
2. பாஸ்மதி அரிசி 1 கு 1./2 பாத்திரம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
3. பச்சை பொன்னி அரிசிக்கு 1 கு 1.3/4 பாத்திரம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
4. துளசி அரிசி. புல்லட் அரிசி.24 கேரட் அரிசி. மயூரி அரிசி. இவை அனைத்தும் பச்சை பொன்னி சேர்ந்தவை
5. புழுங்கல் அரிசி ஆஃப் ஆயில் அரிசி நொய் அரிசி செய்யும் வேண்டுமானால் ஒன்னுக்கு ரெண்டு தண்ணீர் பாத்திரம் வைக்க வேண்டும்.
6. அரிசி முன்னாடி அளந்து ஊற வைக்க வேண்டும் கண்டிப்பாக
7. அளக்கும் பாத்திரத்திற்கு ஒரு அடையாளம் வைக்க வேண்டும் அந்த பாத்திரத்தில் தான் தண்ணீர் அளந்து ஊற்ற வேண்டும்.

#பூண்டு இஞ்சி
1.1 கிலோ அரிசி 1 கிலோ கறி சேர்த்தால்
100 g பூண்டு 100 இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்.
2.1 கிலோ அரிசி 3/4 கிலோ கறி சேர்த்தால்
100 g பூண்டு 75 g இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்
3.1 கிலோ அரிசி 1/2 கிலோ கறி சேர்த்தால்
100 g பூண்டு 50 g இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்
4. பூண்டு தோல் உரித்து அரைத்து சேர்ப்பது ரொம்ப நல்லது.
5. நாங்கள் சொல்லும் செய்முறை படி இஞ்சி பூண்டு சாந்து நல்ல வதங்கி என்னை பிரிந்து வர வேண்டும். இந்த மாதிரி அளவில் இஞ்சி பூண்டு சாந்து சேர்த்தால் பிரியாணி செய்யும்போது உங்களுக்கு கசப்புத்தன்மை வராது

#வெங்காயம்
1. பாஸ்மதி அரிசிக்கு ஒரு கிலோவுக்கு 300 கிராம் சேர்க்க வேண்டும்.
2. சீரக சம்பா அரிசிக்கு ஒரு கிலோவுக்கு 250 கிராம் சேர்க்க வேண்டும்.
3. பச்ச பழைய பொன்னி அரிசிக்கு ஒரு கிலோவுக்கு 200 கிராம் சேர்க்க வேண்டும்
4. வெங்காயம் நல்ல பொன்னிறமா வதங்கினால் தான் நல்ல வாசனையும் சாப்பாடு சீக்கிரம் கெட்டுப் போகாமலும் கிடைக்கும்.
#தக்காளி
1. அரிசி கூட வெங்காயத்தை எந்த அளவுக்கு சேர்க்க வேண்டும் சொல்லி இருக்குமோ அதே அளவுக்கு தக்காளியும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
#சிக்கன்
1. அரிசி கூட எந்த அளவுக்கு கறியை அதிகமாக சேர்த்து பிரியாணி செய்தால் ருசியும் டேஸ்ட்டும் அதிகமாக இருக்கும்.
2. நாங்கள் சொல்லும் செய்முறை மாதிரி கறியை மசாலா உப்பு எலுமிச்சை பழம் சாறு தயிர் சேர்த்து பிசைஞ்சு ஊற வச்சு செய்யுங்கள் கறி நல்லா ஜூஸியாவும் மசாலாவும் நல்லா டேஸ்டாவும் கிடைக்கும். கறி உடையாமல் கிடைக்கும்.
3. மட்டன் பீப் கறி செய்யும்போது தனியா வேகவைத்து பிரியாணி கூட சேர்த்துக் கொள்ளவும் அப்பதான் உங்களுக்கு நல்லா சாப்டா கறி நல்லா சாப்பிட கிடைக்கும்.
#பாத்திரம் வட்டா
1.1 கிலோ கறி 1 கிலோ அரிசி செய்வதற்கு 3 கிலோ பாத்திரத்தில் செய்தால் தான் உங்களுக்கு நல்லா அரிசி உதிரியா கிடைக்கும். வேகும் போது கறியும் உடையாது.
2.1 கிலோ அரிசி 3/4 கிலோ கறி போட்டு பிரியாணி செய்யும்போது 2 கிலோ வட்டாவில் செய்ய வேண்டும.

1. நீங்கள் எப்போதும் பிரியாணி செய்யும்போது மினரல் வாட்டர் கொண்டு உபயோகித்தால் பிரியாணி இன்னும் அதிக சுவை கிடைக்கும்

1. ஆர்வமும் அதிகம் உழைப்பும் இருந்து நாம் பிரியாணி செய்தால் எல்லோரும் பிரியாணி மாஸ்டர் தான்.

பிரியாணி உரிமை யாருக்கும் சொந்தமில்லை அதிக ஆர்வமும் உழைப்பவர்களுக்கு மட்டுமே 🙏🙏🙏🙏

Комментарии

Информация по комментариям в разработке