இந்த மாதம் அற்புதம் பெற தடையாக இருக்கிற தடைகளை நாம் அகற்றினால் கர்த்தர் அற்புதம் செய்வார்

Описание к видео இந்த மாதம் அற்புதம் பெற தடையாக இருக்கிற தடைகளை நாம் அகற்றினால் கர்த்தர் அற்புதம் செய்வார்

Praise The Lord

Good Morning

கர்த்தர் நல்லவர்
அவர் கிருபை என்றும் உள்ளது.

இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார்.
யோவான் 11:39

இந்த ஆண்டு துவக்கத்தில் கர்த்தர் நமக்கு அநேக வாக்குத்தங்கள் கொடுத்தார். அவற்றில் சில நிறைவேறியிருக்கிறது. சில நிறைவேறாமல் இருக்கலாம். நிறைவேறாமல் இருக்கிற காரியங்களுக்கு சில தடைகள் இருக்கலாம். இந்த ஆண்டு கடைசி மாதம் டிசம்பர் மாதத்தில் கூட கர்த்தர் நமக்கு கொடுத்த எல்லா வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்ற அவர் வல்லவராய் இருக்கிறார். எனவே றடைபெறாத அற்புதத்தை பெற தடைகளை நாமே தள்ளிப்போட்டால், புரட்டி போட்டால், அற்புதத்தை அதிசயத்தை காணலாம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மரித்து அடக்கம் பண்ணப்பட்டு நாலுநாளான லாசருவின் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். லாசரு மரித்து நான்கு நாளில் அவனுடைய இரத்தம் உறைந்திருக்கும், வெளியேறியிருக்கும், கெட்டு போய் இருக்கும். சதை அழுகியிருக்கும். கண் காது மூக்கு எல்லாம் சிதைந்து இருக்கும். ஒன்றுமே இல்லாத நிலையில், நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று, மார்த்தாளிடம் சொன்ன இயேசுகிறிஸ்து லாசருவே வெளியே வா என்று சொல்லி பெரிய அற்புதத்தைச் செய்யப் போகிறவருக்கு, அந்தக் குகையின் மேல் இருந்த கல்லை தானாக நகட்டச் செய்ய முடியும். பெரிய அற்புதத்தை செய்யப் போகிற இவருக்கு இது லேசான காரியம். ஆனால் அவர் செய்யப் போகிற பெரிய அற்புதத்திற்கு, அதிசயத்திற்கு தடையாக இருக்கிற காரியத்தை,
தடையாக இருக்கிற கல்லை நம்மைத்தான் எடுத்துப் போட சொல்கிறார். அப்போது அந்தக் கல்லை எடுத்துப் போட்டார்கள்.
அதாவது அற்புதம் அதிசயம் நடைபெற தடையாக இருந்த தடையை உடைத்தெறிந்தார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும்
நீர் என்னை அனுப்பினதைச் சூழந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள்நிமித்தம் இதைச் சொன்னேன் என்று சொல்லி லாசருவே வெளியே வா என்று பெரிய அற்புதத்தை செய்தார்.
ஆம், கர்த்தருக்கு பிரியமானவர்களே இன்று தேவனிடத்தில் பெரிய அற்புதத்தை அதிசயத்தை எதிர்பார்த்திருக்கிற நாம்
அவற்றைப் பெற வேண்டுமானால் அவற்றிற்கு தடையாக இருக்கிற காரியங்களை நாம்தான் நீக்க வேண்டும் நாம் தான் அந்த தடையை உடைக்க வேண்டும். நமக்கு கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தை பெற தடையாக இருக்கிற தடைகளை உடைத்தெறிந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே என்னுடைய வாழ்க்கையிலும் எல்லாமே முடிந்து போன போதிலும், என்னுடைய ஆசீர்வாதங்களை நான் இழந்து போனபோதும், நீர் எனக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட, அற்புத அதிசயத்தை செய்து என்னை ஆசீர்வதியும் என்று நாம் ஜெபிப்போமானால், நம்முடைய வாழ்க்கையிலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசயத்தையும், அற்புதத்தையும் செய்வார். ஆமென்.
சர்வ வல்லமை உள்ள சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களுடைய வாழ்க்கையில் நாங்கள் உம்முடைய அதிசயத்தையும் அற்புதத்தையும் பெற முடியாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற அனைத்து தடைகளையும் கல்களையும், எங்களுடைய வாழ்க்கையில் உம்முடைய ஆசீர்வாதத்தை பெறுவதற்கு தடையாக இருக்கிற தடை கற்களையும் நாங்கள் உடைத்துப் போடுவதற்கு, எடுத்து போடுவதற்கு, தள்ளிப் போடுவதற்கு, விசேஷித்த ஞானத்தையும், ஜெபஆவியையும் கொடுக்க வேண்டும் என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இன்ப நாமத்தில் ஜெபிக்கிறோம்.
கர்த்தாவே இந்த நாளை நீர் எங்களுக்கு கொடுத்ததற்காய் நன்றி இந்த நாளிலும் பிறந்தநாள் திருமண நாள் காண்கின்ற யாவருடைய வாழ்க்கையிலும் இருக்கின்ற எல்லா தடை கற்களையும் எடுத்து போட்டு அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என அவர்களை வாழ்த்தி ஆசீர்வதித்து ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென் ஆமென் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை இன்று முழுவதும் நம்மோடு கூட இருப்பதாக ஆமென் #blessing #gospel #hope #today #godisgood #kartharnallavar #bible #godsword #god

Комментарии

Информация по комментариям в разработке