Sri Sathya Sai Chalisa Tamil Song |ஸ்ரீ ஸத்ய ஸாயி சாலீஸா|ஆராதனா மகோத்சவ சிறப்பு வெளியீடு

Описание к видео Sri Sathya Sai Chalisa Tamil Song |ஸ்ரீ ஸத்ய ஸாயி சாலீஸா|ஆராதனா மகோத்சவ சிறப்பு வெளியீடு

#soothing #relaxing #peaceful #music #spiritual #populardevotional #srisathyasai #radiosai #sathyasaibaba #prasanthinilayam #popular #srisathyasaitamil #sathyasaichalisa

ஶ்ரீராமனின் தாசனான ஹனுமானின் புகழ் பாடும் ஹனுமான் சாலீஸா போலவே இந்த ஶ்ரீ ஸத்ய சாயி சாலீஸாவும் நாற்பது கண்ணிகளில் நம்மை ஆட்கொண்ட ஸ்வாமியின் அளவிட முடியாத கருணையையும், அது தரும் எல்லையற்ற நன்மைகளையும் விவரிக்கிறது. அந்தக் கருணையைத் தந்து அருளும்படி ஸ்வாமியிடம் வேண்டச் சொல்லி உள்ளத்திற்கு அறிவுறுத்துகிறது.

பகவானின் பொற்பாத கமலங்களில் ஸ்ரீ ஸத்ய சாயி சாலீஸாவை ஆராதனா நன்னாளில் சமர்ப்பிக்கிறோம்

Credits:
இயற்றியவர்: திருமதி பவானி வாஞ்சிநாதன்
பாடியவர்கள்: திருமதி G.மீனாக்ஷி, திருமதி G.வித்யா
வாத்தியங்கள்:
திரு முடிகொண்டன் ரமேஷ் – வீணை
திரு S.J. அர்ஜுன் – மிருதங்கம்
புல்லாங்குழல்: திரு நீலகண்டன்
தபேலா & முகர்சிங் – திரு. N. சுந்தர்
கஞ்சீரா & தாளம் – திரு சாயி பரத்
ஆடியோ பதிவு: Sai Rocks Studio, Chennai

*ஸ்ரீ ஸத்ய ஸாயி சாலீஸா*

ஸ்ரீ குரு தேவா ஸத்ய ஸாயிராம் 
திருவடி சரண் அடைந்தேனே
அருள் செய்ய தருணமிதே கனஷ்யாம் 
தஞ்சம் என்றே உரைத்தேனே
 
அறம் பொருள் இன்பமும் வீட்டுடன்
தரப்பணிந்தேன் திருத்தாளை
ஏதும் ஞானமில்லா ஏழை என்றாலும்
சூட்ட வந்தேன் புகழ் மாலை
 
1. ஜெய ஸாயிராமன் புகழ்தனைப்பாடு
மனமே ஆனந்த நாட்டியம் ஆடு
2. நித்யமானதொரு பொருளினைத் தேடு
ஸத்ய ஸாயிராமன் சரணினைக் கூடு
3. ஈச்வராம்பா ஈந்த இனிய குமாரன்
தீனரைக் காத்திடும் திவ்ய சுகுமாரன்
4. சொல்லுக்குள் அடங்குமோ சுந்தரமுகமே
நல்வினைப் பயனால் காண்பது நிஜமே
5. லிங்கோத்பவம் செய்யும் பங்கய உதரம் 
மங்களப் புன்னகை மலரும் பொன்னதரம்
6. புட்டப்பர்த்தி வாழும் புண்ணிய ரூபன்
இஷ்டமானவரம் ஈந்திடும் ஈசன்
7. கண்ணனும் ராமனும் கணபதி வேலனும்
தண்மதி சூடிய சிவனுடன் ப்ரம்மனும்
8.பெண்ணுருக்கொண்டருள் புரிகின்ற சக்தியும் 
எண்ணரும் தெய்வங்கள் இவன் என்றுணர்ந்திடு
 
பர்த்தி நிவாசா ஸாயி ராம்
பரம தயாளா ஸாயி ராம் (2 தடவை)
 
9. ஓதிடும் வேதத்தின் உட்பொருள் தானாய் 
உருகிடும் உள்ளமாம் மதிதொடும் வானாய்
10. பருகிடப் பருகிடத் தித்திக்கும் தேனாய் 
பர்த்தியில் அமர்ந்திட்டான் ஸாயி பகவானாய்
11. எங்கும் நிறைந்ததோர் அந்தர்யாமி
அடியவரழைப்பதோ ஆசையாய் ஸ்வாமி
12. விண்ணவர் ஏத்தும் இவ்விமலனைத் தந்து 
புண்ணியம் கொண்டதே பாரத பூமி
13. பந்தபாசம் பின்னால் அலையும் அஞ்ஞானம்
தன்னை உயர்வாய் எண்ணித் தருக்கிடும் மானம்
14. சிந்தையில் தெய்வத்தை சிக்கென இருத்தி 
வந்தனை செய்திடும் வாய்த்தநல் ஞானம்
15. நடப்பது அறியாய் எதுவென நாளை
துன்பமோ இன்பமோ தொடர்ந்திடும் வேளை
16. கற்றறி ஞானமும் கவைக்குதவாதே 
பற்றிடு பரமனின் பங்கயத்தாளை

பர்த்தி நிவாசா ஸாயி ராம்
பரம தயாளா ஸாயி ராம் (2 தடவை)

17. மாற்றரும் பவப்பிணி மாற்றிடும் மருந்து
மாதவன் தரிசனம் கண்ணுக்கு விருந்து
18. கணம் மறந்தாலும் கதியில்லை அறிந்து
பணிந்திடு மனமே பரமனைப் புரிந்து
19. காமக்குரோதலோபக் குணங்களைத் தள்வாய்
நாமம் ஒன்றே துணை நரகினை வெல்வாய்
20. கூப்பியே கரங்களைக் கும்பிடச் சொல்வாய் 
பூட்டியே உள்ளத்தில் புனிதனைக் கொள்வாய்
21. காப்பவன் நீயெனக் கால்களில் விழுவாய் 
கண்மணி நீர் கொண்டு கழுவியே எழுவாய்
22. கருணையின் கடல் அவன் பெரும்பயம் தணிவாய் 
கைவிடமாட்டான் என்றுள்ளம் துணிவாய்
23. உயிர் எல்லாம் ஒன்றென எண்ணிடப் பழகு
உயர்வில்லை தாழ்வில்லை உள்ளுவதழகு
24. மானுடர் வாழ்க்கை உயர்ந்திடத் தேவை 
மன்னுயிர் வாழ்ந்திடச் செய்திடும் சேவை

பர்த்தி நிவாசா ஸாயி ராம்
பரம தயாளா ஸாயி ராம் (2 தடவை)
 
25. பிறர்நலம் பேணிடக் காட்டிடும் வேகம் 
பரகதி வாய்த்திட உதவும் விவேகம்
26. சொன்னவன் தேவன் ஏற்றிட வேண்டும்
மறந்திடில் விழுவாய் நரகிடை மீண்டும்
27. பாரதப்போரன்று பாண்டவர் வாழ 
கீதையைச் சொன்னான் பார்த்தனின் ஸாரதி
28. மாமதப் போரின்று மக்களைக் காக்க நல் 
பாதையைச் சொன்னான் ஸனாதன ஸாரதி
29. தாயுடன் தந்தை தனிப்பெரும் குருவாய் 
ஆனவன் இவனே ஆனந்த உருவாய்
30.காத்திடும் தெய்வமும் ஆனதனாலே
போற்றிப் புகழ்ந்திடு புதிய பண்ணாலே
31. பாதித்து சோதிக்கும் பற்பல கிரகங்கள் 
பாதம் பிடித்தவரைப் பார்ப்பதும் இல்லை
32.விட்டகலாது தொடர்ந்திடும் விதியும் 
பட்டென நீங்குமே படுவரோ தொல்லை
 
பர்த்தி நிவாசா ஸாயி ராம்
பரம தயாளா ஸாயி ராம் (2 தடவை)
 
33.ஸத்ய தர்ம சாந்தி ப்ரேமைக்கு (உ)தாரணன்
ப்ரசாந்தி நிலையத்தின் சத்யநாராயணன்
34. அருள்மிகு கை தரும் அற்புத உதியே
அன்பர்க்கோ மாறும் நூறாயிரம் விதியே
35.கருணைக்கண் நோக்கிட ஓடிடும் நோயும்
கால்களில் சிரம்படப் பாபங்கள் தேயும்
36.மதமுடன் வேட்கையும் மனதினில் குறையும் 
இதமிகு நிம்மதி இதயத்துள் நிறையும்
37.பாபா நாற்பதும் சமர்ப்பித்தேன் பணிவாய்
பர்த்தி புரீச்வரா பதமலர்க்கு(அ)ணிவாய்
38.தேவா எந்தன் வினை தீர்த்தருள் புரிவாய் 
இனிப் பிறவாவகை திருப்பதம் தருவாய்
39.ஸாயி புகழ் சொல்லும் நாற்பது பாட்டும் 
படிப்பவர் உள்ளத்தில் பரவசமூட்டும்
40.பெரும் புகழ் செல்வமும் ஆயுளும் கூட்டும் 
பரமனை அடையும் நல் பாதையைக் காட்டும்
 
பர்த்தி நிவாசா ஸாயி ராம்
பரம தயாளா ஸாயி ராம் (2 தடவை)

எங்கும் நிறைந்த பரம் பொருளே 
மங்கள ஸாயி கண் பாராய்! 
சந்ததமும் உனை மறவாதபடி என் 
நெஞ்சில் அமர்ந்திட வாராய்!
 
*ஜெய் சாயி ராம்*

For more updates:
Website: https://www.sssmediacentre.org/
Facebook:   / sri.sathya.sai.baba  
Twitter:   / radiosaih2h  
Instagram:   / srisathyasaiofficial  
YouTube Main Channel:    / radiosaivideos  
Linkedin -   / sri-sathya-sai-media-centre  
Now You can watch on 'Prasanthi Connect' Mobile App
Google : https://bit.ly/3r25M7N
Apple : https://apple.co/3KfWj3F
- Sri Sathya Sai Media Centre

Комментарии

Информация по комментариям в разработке