மானுட அறிவை நம்புதல் - ஜெயமோகன் | Faith in Human Thought - Jeyamohan

Описание к видео மானுட அறிவை நம்புதல் - ஜெயமோகன் | Faith in Human Thought - Jeyamohan

National Library Board - Singaporeக்காக எழுத்தாளர் ஜெயமோகன் 7 January 2024, ஞாயிறு அன்று Zoomல் ஆற்றிய உரை.

Synopsis:

அண்மைக்காலமாக அறிவியலுக்கு எதிராக மூன்று தரப்புகள் பேசிக்கொண்டிருக்கின்றன.

1.பின்நவீனத்துவ தரப்பு அறிவியல் என்பது ஒரு புனைவுதான், மற்ற எல்லா புனைவுகளையும் போல என்று சொல்கிறது.

2. சில மெய்யியல் தரப்புகள் அறிவியல் ஒருவகையான மதம் என்றும் அது முதலாளித்துவத்தின் ஆயுதமாக மாறிவிட்டது என்றும் சொல்கின்றன.

3. மூன்றாவதாக பசுமை அமைப்புகள், சூழியல் அமைப்புகள், மாற்று மருத்துவம் சம்பந்தமான அமைப்புகள் அறிவியல் உருவாக்கும் அழிவுகளை முன்னிலைபடுத்துகின்றன.

இவை மூன்றுமே ஒருதரப்பட்ட சிந்தனைகள். அவை சில உண்மைகளை பெரிதுபடுத்துகின்றனவே ஒழிய முழு உண்மைகளைச் சொல்வது இல்லை.

சென்ற நூறாண்டுகளில் இந்த உலகம் சந்தித்த மிகப்பெரிய இரண்டு பிரச்சனைகளை அறிவியல் வென்றிருக்கிறது. ஒன்று தொற்றுநோய், இன்னொன்று பஞ்சம்.

அதன் விளைவாக நுகர்வு பெருகி, சூழியல் அழிவுகளும் மருத்துவத்தின் பின்விளைவுகளும் உருவாகி வருகின்றன. அவற்றையும் அறிவியல் எதிர்கொள்ளும் என்று நம்பலாம்.

அறிவியல் மேல் விமர்சனம் இருக்கலாம். அறிவியல் மறுப்பு என்பது ஒரு வகையான பழமைவாதம், தற்கொலைவாதம்.

#jeyamohan

Комментарии

Информация по комментариям в разработке