ஈழத்தில் மிகவும் பிரபலமான மிதிவெடி! ஒன்று சாபாபிட்டாலே பசி போய்விடும்! Mithivedi | Mithivedi rolls

Описание к видео ஈழத்தில் மிகவும் பிரபலமான மிதிவெடி! ஒன்று சாபாபிட்டாலே பசி போய்விடும்! Mithivedi | Mithivedi rolls

ஈழத்தில் பிரபலமான இந்த மிதிவெடி சத்தும் நிறைந்தது.ஒன்று சாப்பிட்டாலே பசி போய்விடும்.
ஆட்டிறைச்சியை உப்பு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வேகவைத்தெடுக்கவும்.உருளைக்கிழங்கை அவித்தெடுக்கவும்.முட்டையையும் அவித்தெடுக்கவும் மைதாமாவை சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி பதத்திற்கு குழைத்து வைக்கவும்.சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, பெருஞ்சீரகம், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.பின் அவித்த உருளைக்கிழங்கை மசித்து இதில் சேர்த்து இதற்கு தேவையான உப்பு, மிளகாய்த்தூள் போட்டு நன்றாக கிளறி விடவும்.பின்னர் அவித்த ஆட்டிறைச்சியை இதில் சேர்த்து கிளறி இறைச்சி சரக்குக் தூள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து இறக்கி ஆறவிடவும்.அவித்த முட்டையை துண்டுகளாக வெட்டவும்.
பின் குழைத்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தட்டி அதில் கறியையும் இரண்டு முட்டைத் துண்டுகளையும் வைத்து சுத்தி எடுத்து முட்டையில் தோய்த்து றஸ்க் தூளில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

தேவையான பொருட்கள்
1. ஆட்டிறைச்சி / mutton - 300 g
2. அவித்த முட்டை / boiled eggs - 5
3. அவித்த உருளைக்கிழங்கு / boiled potatoes - 300 g
4.வெங்காயம் / onion - 2
5. முட்டை / eggs - 2
6. மரக்கறி எண்ணெய் / vegetabl oil - 300 ml
7. தனி மிளகாய்த்தூள் / chilli powder - 2 tsp
8. உப்புத்தூள் / table salt - 2 tsp
9.மைதாமா / all purpose flour - 400 g
10. எலுமிச்சை சாறு / lemon juice - 1tsp
11. பிரட் தூள் / bread crumbs - 200 g
12. கடுகு / mustered - 1/2 tsp
13. பெருஞ்சீரகம் / fennel seeds - 1/2 tsp
14. மஞ்சள்தூள் / Turmeric powder - 1/2 tsp
15. வாசனைத் திரவியங்கள்
1. கறுவா / cinnamon - 1"
2. கராம்பு / cloves - 5
3. ஏலக்காய் / cardamom - 5

Комментарии

Информация по комментариям в разработке