தமிழர் இழந்த பெருநிலப்பரப்பு | The Lost lands of Tamilnadu | SangathamizhanTV | Tamil

Описание к видео தமிழர் இழந்த பெருநிலப்பரப்பு | The Lost lands of Tamilnadu | SangathamizhanTV | Tamil

தமிழர் இழந்த பெருநிலப்பரப்பு | The Lost lands of Tamilnadu | SangathamizhanTV | Tamil

திருப்பதி கோவில் மர்மங்கள்
Part 1 link:    • Видео  
Part 2 Link:    • முருகனின் 7 வது படை வீடுதான் திருப்பத...  

பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம், ‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்உலகம்’ என்று தமிழகத்தின் எல்லையைக் குறிப்பிடுகிறது. தமிழகத்தின் எல்லையாக தெற்கே குமரியும் வடக்கே மேல் திருப்பதி என்றழைக்கப்படும் திருவேங்கடமும் காலம்காலமாக குறிப்பிடப்பட்டு வந்துள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலான நிலப்பரப்புகள் தற்போது நம்மிடம் இல்லை குறிப்பாக திருப்பதி. சுதந்திரத்துக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கை வலுத்து வந்தது. அதற்கான அவசியம் குறித்து ஆராய மத்திய அரசால் 1948 இல் எஸ்.கே. தார் என்பவர் தலைமையில் ஓர் ஆணையம் (Dhar commission) அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், “மொழிவாரி மாநிலம் அவசியமில்லை” என்றது. சென்னையை ஆந்திரத்தின் தலைநகராக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி “மதராஸ் மனதே” என்ற போராட்டத்தை மேற்கொண்டார் பொட்டி ஸ்ரீ ராமுலு. “தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடினார் “சிலம்புச் செல்வர்” ம.பொ.சி. ஃபசல் அலி குழுவின் பரிந்துரையின் பேரில் சித்தூர், நெல்லூர் போன்ற தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிகள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. இதேபோல தமிழகத்தின் தெற்கு எல்லையில் திருவிதாங்கூர் அரசின் அங்கமாக இருந்த தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றங்கரையின் தென்பகுதி, நெடுமாங்காட்டின் கிழக்குப் பகுதி, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகள் கேரளவோடு இணைக்கப்பட்டது, இதனை எதிர்த்து மார்ஷல் நேசமணி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தினமலர் நாளேட்டின் நிறுவனர் ராமசுப்பையர் போன்றோரும் உற்ற துணையாக இருந்து போராட்டத்தை தீவிரமாக்கினர். இருப்பினும் எல்லை விவகாரங்கள் 100 சதவீதம் முடிவுக்கு வரவில்லை. பிரச்னை தொடர்ந்தது. தமிழகத்தின் பாரம்பரிய எல்லைகளை மீட்பதற்கு பெரும் போராட்டங்களை தேசியத் தலைவர்கள் மேற்கொண்டபோதும், சில பகுதிகள் தமிழகத்துக்கு கிடைக்காமலே போயின. அதனால், பாரம்பரியத் தொடர்பையும் இயற்கை வளங்கள் பலவற்றையும் இழக்க நேரிட்டது.

In this video, I'm going to explain about the language-based state formation. After the independence language-based states were formed. During the partition, Tamilnadu lost almost 60,000 square kilometers of land to Andhra Pradesh, Karnataka, and Kerala. Among the half of the lands were lost to Andhra Pradesh alone. Approximately, 29,000 square kilometers were lost to Andhra which includes Tirupathi, Kalahasthi, Nagari, Putur and entire Nellur district. Because of this we also lost several rivers. Simialrly, We also lost 16,946 square kilometers of lands to Karnataka, which includes the Kollegal and Kolar gold mine regions. Because of this, we lost control over the river Cauveri. Apart from this 12,219 square kilometers were lost to Kerala, which includes Devikulam, permed, Palakkad, Munnar, Thekkady. Because of this we also lost control over the Idukki dam and Mullai Periyar Dam. Please watch the video for more details and keep support Sangathamizhan TV.

#SangathamizhanTV #Tirupati #LanguageBasedStateFormation #TamilsLostLands #Tamilnadu #Andhrapradesh #Karnataka #Kerala #MaPoSi

***************************************************************************************
For more videos please SUBSCRIBE to Sangathamizhan TV:    / @sangathamizhantv  

Email ID: [email protected]

Follow me on Facebook Page:   / changatamizhan  

Комментарии

Информация по комментариям в разработке