கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுபடுகையில் 11-வது யானைகள் சிறப்பு நல்வாழ்வு முகாம் துவக்க விழா நடைபெற்றது.
யானைகள் நல்வாழ்வு முகாமினை வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆகியோர் துவக்கி வைத்தனர். அருகில் சட்ட பேரவை துணை தலைவர் பெள்ளாச்சி வி.ஜெயராமன், இந்து சமய அறநிலையத்துறை அரசு சிறப்பு ஆணையர் தா.கி.இராமசந்திரன், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.கே.சின்னராஜ், அம்மன் கே.அர்ச்சுணன், வால்பாறை, கஸ்தூரிவாசு மற்றும் உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழகக் கோயில்கள் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த யானைகளின் உடலும், மனமும் புத்துணர்வு பெற வேண்டி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி ஆற்றுப் படுகையில் ஒவ்வோர் ஆண்டும் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் நடைபெற்றும்.
அதனடிப்படையில் நடப்பு ஆண்டில் 2018 டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்கி 48 நாள்கள் நடைபெற்ற இந்த முகாம் ஜனவரி 30-ஆம் தேதி வரை நடைபெறும்
இந்த முகாமில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த கோயில் மற்றும் கோயில் மடங்களைச் சேர்ந்த 28 யானைகள் கலந்துகொண்டன.
இம்முகாமில் யானைகளுக்கு தினமும் நடைப் பயிற்சி, மருத்துவப் பரிசோதனை, உடல் எடைக்கேற்ப சத்து மாத்திரைகள் கலந்த உணவுடன், பசுந் தீவனங்களும் வழங்கப்பட்டன.
யானைகள் குளிப்பதற்கென பிரத்யேகமாக ஷவர்கள் அமைக்கப்பட்டு, தினமும் பவானி ஆற்று நீரில் குளிக்க வைக்கப்பட்டன.
உடல் நலிவுற்ற யானைகளுக்கு முகாமில் உள்ள மருத்துவக் குழுவினர் தினமும் யானைகளின் உடலைப் பரிசோதித்து, தேவையான மருந்துகளையும் வழங்கி வந்தனர்.
கோயில்களில் தனியே இருந்து வந்த யானைகள் முகாமில் பிற யானைகளைக் கண்டதும், நட்புடன் அன்பு பாராட்டி வாஞ்சையுடன் பழகி வந்தன. தினமும் ஒன்றுக்கொன்று பாசத்துடன் தும்பிக்கையால் உறவாடி, தங்கள் நேசத்தை வெளிப்படுத்தி வந்தன. முகாமில் யானைகள் ஒரு மண்டலம் (48 நாள்கள்), இந்தச் சூழலில் இருந்து வந்ததால், நாளுக்கு நாள் அவற்றின் உடலும், மனமும் புத்துணர்வு பெற்று, தற்போது உற்சாகத்துடன் இருந்து வருகின்றன. முகாமில் யானைகள் சலங்கை மணி அடித்தல், மெளத் ஆர்கன் வாசித்தல், பந்து விளையாடுதல், கம்பு சுற்றுதல் என விளையாட்டுகளில் ஈடுபட்டும் பார்வையாளர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தி வந்தன.
யானைகள் நல்வாழ்வு முகாமில் கோவை பேரூர் பட்டீஸ்வார கோவிலில் உள்ள கல்யாணி யானை இடம்பெற்றது.
இதுகுறித்து பாகன்கள் கூறியதாவது:
இயற்கைச் சூழலில் கூட்டமாக வாழும் இயல்புடைய யானைகள், இதுவரை கோயில்களில் தனித்திருந்தே வளர்ந்து வந்துள்ளன. இந்நிலையில், முகாமில் வனம் சார்ந்த பகுதியில் பிற யானைகளுடன் ஒரே இடத்தில் 48 நாள்களைக் கழித்ததால் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றன.
முகாம் நிறைவுற்ற நிலையில் யானைகளின் உடலும், மனமும் புத்துணர்வு பெற்றிருப்பது எங்களுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. அதேபோல, முகாமை விட்டுப் பிரிவது யானைகளைப்போல எங்களுக்கும் மிகுந்த மனத் துயரத்தை ஏற்படுத்துகிறது என்றனர்.
கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]
Информация по комментариям в разработке