15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகர்!@ganeshchadhurthi

Описание к видео 15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகர்!@ganeshchadhurthi

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 15 லட்சம் மதிப்பில் புதிய ரூபாய் நோட்டுகள் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு,வெள்ளி கவசத்தில் காட்சியளித்த காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகர்.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகே மிகவும் பழமையான ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது.

இத் திருக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்வது வழக்கம்.

அதன்படி இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி ஏலேல சிங்க விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வெள்ளிக்கவசம் சாற்றி பூ மாலை அணிவித்து 15 லட்சம் ரூபாய் மதிப்பில் 500 ரூபாய்,100 ரூபாய்,50 ரூபாய்,இருபது ரூபாய், உள்ளிட்ட புதிய ரூபாய் நோட்டுக்களால் வண்ண வண்ண நிறத்தில் தோரணமாக கோவில் கருவறை முழுவதும் கட்டி விநாயகப் பெருமானுக்கு சிறப்பு தீபாராதனைகள் செய்து நைவைத்தியம் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்ட விநாயகரை தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.

பின்னர் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Комментарии

Информация по комментариям в разработке