கடன் தீர பரிகாரம் - 10 எளிய பரிகாரங்கள் ஒரே பதிவில் | Kadan Prachanai Theera Pariharam

Описание к видео கடன் தீர பரிகாரம் - 10 எளிய பரிகாரங்கள் ஒரே பதிவில் | Kadan Prachanai Theera Pariharam

Kadan Prachanai Theera Pariharam(kadan prachanai theera manthiram/kadan prachanai theera in tamil/kadan prachanai neenga)

கடன் தீர பரிகாரம் - கடன் தீர மந்திரம் - கடன் தொல்லை நீங்க பரிகாரம்,

1. குலதெய்வ வழிபாடு:

சென்ற பிறவில் செய்த தவறுகளால் இந்த பிறவியில் ஏற்பட்ட கடன் தோஷம் மற்றும் கடன் தொல்லையில் இருந்து மீள 3 பௌர்ணமி நாட்களில் உங்கள் குலதெய்வத்தை வணங்கி வழிப்பாடு செய்து வந்தால் கடன் தொல்லை படிபடியாக குறைத்து,கடனை விரைவில் அடைக்கும் நல்ல சூழ்நிலை உருவாகும்

குலதெய்வம் கோவில் அருகில் இல்லாமல் தொலைவில் வேறு ஊர்களில் வசிப்பவர்கள், அவர்கள் வீட்டிலேயே குலதெய்வதின் போட்டோவை வைத்து வழிபடலாம், அல்லது குலதெய்வம் கோவில் உள்ள ஊர் திசை பார்த்து வழிபடலாம்.

இரண்டு 5 முக நெய்விளக்கு ஏற்றி 9 பௌர்ணமி நாளில் தொடர்ச்சியாக இந்த குலதெய்வ வழிப்பாடு செய்து வந்தால் கடன் சுமை குறையும். 90 நாளில் கடனை அடைக்கும் நல்ல சூழ்நிலை உருவாகும். உங்களுக்கு வரவண்டிய பாக்கி இருந்தாலும் வசூல் ஆகிவிடும் .

2. கடன் நீக்கும் கல் உப்பு பரிகாரம்:

ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு ஒரு சிறிய கல் உப்பு பாக்கெட்டை வாங்கி வந்து, உப்பு பாத்திரத்தில் போடவும். இதை மாதம் ஒருமுறையேனும் தொடர்ந்து செய்து வர வீட்டில் மஹாலக்ஷ்மி வரவிற்கு குறைவே இருக்காது.

3. கடன் தீர்க்க உகந்த ரகசிய நாட்கள் "மைத்ர முகூர்த்தம்”:

மைத்ர முகூர்த்தம் கணக்கிடும் முறை:

1. செவ்வாய்க்கிழமையும் + அசுவனி நட்சத்திரமும்+ மேஷ லக்கினம் - 100%
2. செவ்வாய்க்கிழமையும் + அனுஷ நட்சத்திரமும் + விருச்சிக லக்கினம் - 100%
3. வேறு கிழமைகள் + அசுவனி நட்சத்திரமும்+ மேஷ லக்கினம் - 75%
4. வேறு கிழமைகள் + அனுஷ நட்சத்திரமும் + விருச்சிக லக்கினம் - 75%

Mythra Muhurtham is calculated as follows:-

Option 1 - Tuesday + Aswini Natchathiram + Mesha Lagnam - 100% Effective
Option 2 - Tuesday + Anusha Natchathiram + Viruchiga Lagnam - 100% Effective
Option 3 - Any other day + Aswini Natchathiram + Mesha Lagnam - 75% Effective
Option 4- Any other day + Anusha Natchathiram + Viruchiga Lagnam - 75% Effective

4. கடன் அடைக்க உகந்த ஓரைகள்:

1. செவ்வாய்க்கிழமை - சனி ஓரை ( Tuesday - Sani Horai)
2. செவ்வாய்க்கிழமை – செவ்வாய் ஓரை (Tuesday - Sevvai Horai)
3. சனிக்கிழமை - செவ்வாய் ஓரை (Saturday - Sevvai Horai)
4. சனிக்கிழமை - சனி ஓரை ( Saturday - Sani Horai)

5. கடன் அடைக்க உகந்த குளிகை நேரம்:

சனிக்கிழமை - குளிகை நேரம் - சூர்யோதயத்தில் இருந்து 1 மணி 30 நிமிடங்கள் (Saturday - Kuligai Time - 1 Hour 39=0 Minutes from the Sunrise).

6. கடன் அடைக்க உகந்த சதுர்த்தி திதி:

ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும் சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் அசல் தொகையில் ஒரு பகுதியை திரும்ப கொடுத்தால் கடன் சீக்கிரம் அடைபடும்.

7. கடன் அடைக்க உகந்த கரிநாள்:

கரிநாள் உள்ள நாட்களிலும் கடனை அடைக்கலாம்,

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் கரிநாட்களின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. வருடத்திற்கு 35 நாட்களைக் கரிநாட்கள்.

1. சித்திரை 6,15
2. வைகாசி 7, 16, 17
3. ஆனி 1,6
4. ஆடி 2, 10, 20
5. ஆவணி 2, 9, 28
6. புரட்டாசி 16, 29
7. ஐப்பசி 6, 20
8. கார்த்திகை 1, 4, 10, 17
9. மார்கழி 6, 9, 11
10. தை 1, 2, 3, 11, 17
11. மாசி 15, 16, 17
12. பங்குனி 6, 15, 19

8. கடன் அடைக்க உகந்த மரணயோக நாட்கள்:

மரணயோகம் உள்ள நாட்களிள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். அன்றைக்கு கடனை அடைத்தால் அல்லது அசல் தொகையில் ஒரு பகுதியை திரும்ப கொடுத்தால், அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது. (மரணயோகம் உள்ள நாட்கள் எது என்று தினசரி காலண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும்.)

9. கடன் அடைக்க உதவும் - கந்த சஷ்டி கவசம்

தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்துவர ருண, ரோக, சத்ரு தொல்லை நீங்கும். சஷ்டி திதியன்று முருகன் கோயில்களில் கந்த சஷ்டி கவசம் படித்துவர, கடன் சீக்கிரம் அடைபடும்.

10. கடன் அடைக்க உதவும் - நரசிம்ம பெருமாள் வழிபாடு

சக்தி வாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாளை பவுர்ணமி பிரதோஷ காலத்திலும், சுவாதி நட்சத்திர காலத்திலும் பால், இளநீர், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனப் பொடி, பச்சரிசி மாவு போன்ற அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும், துளிசி மாலை சாத்தியும் வழிபடலாம்.

இந்த வழிபாட்டால் தீராத கடன் தொல்லைகள் தீரும்.

ஸ்ரீ நரசிம்ம காயத்ரி:

ஓம் நரசிம்மாய வித்மஹே
வஜ்ர நகாய தீமஹி
தந்நோ நரசிம்ஹ ப்ரசோதயாத்!

Narasimha Gayatri Mantra:

Om Narasimhaya Vidmahe
Vajra Nakhaya Dhimahi
Tanno Narasimhah Prachodayath!

இந்த நரசிம்ம காயத்ரி மந்திரதை தினமும் 108 முறை பாராயணம் செய்து வழிபட கடன் சீக்கிரம் அடைபடும்.

#aalayamselveer #kadanprachanaitheera

Комментарии

Информация по комментариям в разработке