பட்டா சிட்டா விவரங்கள்
DETAILS OF PATTA CHITTA
கணினி சிட்டாவில் பதியப்பட்டிருக்கும் விவரங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
சிட்டாவின் இடது புற மூலையில் சொத்து எந்த வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்டது என்ற விவரம் இருக்கும்.
வருவாய் மாவட்ட விவரத்திற்கு நேராக சொத்து எந்த வருவாய் வட்டத்திற்கு சம்பந்தப்பட்டது என குறிப்பிடப்பட்டிருக்கும்.
வருவாய் மாவட்ட விவரத்திற்கு கீழாக சொத்து இருக்கும் வருவாய் கிராமத்தின் பெயர் பதியப்பட்டிருக்கும்.
வருவாய் கிராம விவரத்திற்கு நேராக பட்டா எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதனை அடுத்து அந்த பட்ட எண்ணிற்கு உரிய நில உரிமையாளரின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அருகில் நில உரிமையாளர் ஆணாக அல்லது திருமணம் ஆகாத பெண்ணாக இருந்தால் அவர்களது தந்தை பெயரும்,
நில உரிமையாளர் திருமணமான பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவரது கணவர் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
நில உரிமையாளர் 18 வயதுக்கும் குறைவானவராக இருப்பின் காப்பாளர் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதனைத்தொடர்ந்து அந்த குறிப்பிட்ட பட்டா எண்ணிற்குரிய நிலங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
இதில் முதலாவதாக சம்பந்தப்பட்ட நிலத்தின் புல எண் அதாவது சர்வே எண்(Survey number) குறிப்பிடப்பட்டிருக்கும்.
சிலர் பட்டா எண்ணும் சர்வே எண்ணும் ஒன்று என நினைக்கின்றனர் ஆனால் அவை இரண்டும் ஒன்று அல்ல.
சர்வே எண்ணைத்தொடர்ந்து புல உட்பிரிவு எண் அதாவது சப் டிவிசன் நம்பர்(Sub division number) பதியப்பட்டிருக்கும்.
அதற்கு அடுத்து நிலத்தின் வகை(type of land) குறிப்பிடப்பட்டிருக்கும் நிலமானது நீர்பாசன வசதி கொண்ட நன்செய் நிலமா(Wet land) அல்லது மழையை நம்பி உள்ள புன்செய் நிலமா(Dry land) அல்லது மற்றவகை நிலமா என குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதில் எந்த வகையின் கீழாக அந்நிலம் வருகிறதோ அதன் கீழாக அந்த நிலத்தின் பரப்பு விவரம் இருக்கும்.
பரப்பானது ஹெக்டேர் – ஏர்ஸ்(Hectare – ares) என்ற அளவினால் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆனால் பெரும்பாலும் நடைமுறையில் நாம் ஏக்கர் – செண்ட்(acre-cent) என்ற அளவினை பயன்படுத்துவோம்.
அந்த அளவுகளை ஏக்கர் – செண்ட் அளவிற்கு மாற்ற வேண்டுமாயின் அந்த அளவினை 2.47 என்ற எண்ணினால் பெருக்கினால் ஏக்கர் – செண்ட் அளவு கிடைக்கும்.
நிலத்தின் பரப்பு விவரத்தினை தொடர்ந்து அதற்கான தீர்வை அதாவது வரி எவ்வளவு என குறிப்பிடப்பட்டிருக்கும்.
அதற்கடுத்து குறிப்புரைகள் என்ற தலைப்பு கொடுக்கப்பட்டு அதன் கீழாக எந்த உத்தரவின் மூலம் இந்த பட்டா மாற்றம் நிகழ்ந்தது என்ற விவரம் அளிக்கப்பட்டிருக்கும்.
ஒரு வருவாய் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு நில உரிமையாளரின் சொத்துக்கள் யாவும் தொகுக்கப்பட்டு அந்த நில உரிமையாளருக்கு ஒரு எண் வழங்கப்பட்டிருக்கும் அது தான் பட்டா எண்(Patta number).
நில உரிமை தனிப்பட்ட நபருடையது என்றால் அந்த பட்டா எண் தனி நபருக்கு வழங்கப்பட்டிருக்கும் இதனை தனிப்பட்டா(individual patta) என்பர்
நிலமானது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு உரிமையுடையதாயின் அந்த ஒட்டுமொத்த நபர்களுக்கும் சேர்த்து பட்டா எண் கூட்டாக வழங்கப்பட்டிருக்கும் இதனை கூட்டுப்பட்டா(Joint patta) என்பர்.
நில உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தின் வருவாய்த்துறையினரால்(Revenue department) வழங்கக் கூடிய ஒரு ஆவணம் தான் சிட்டா(Chitta).
சிட்டா ஆவணம் கணினி மயமாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் வேண்டுவோர் அதற்கான விவரங்களை கணினியில் உள்ளீடு செய்து சிட்டாவை பெற்றுக்கொள்ளலாம்.
பட்டா, பட்டா எண், சிட்டா, நிலச்சிட்டா, நிலப்பட்டா, சிட்டாவின் விவரங்கள், சிட்டா என்றால் என்ன, பட்டா எண் என்றால் என்ன, தனிப்பட்டா, கூட்டுப்பட்டா, ,சிட்டா பட்டா பற்றிய தகவல்கள், வருவாய்த்துறை ஆவணம், கணினி சிட்டா, கம்பியூட்டர் சிட்டா, 10(1) சிட்டா,நில உரிமை ஆவணம், நிலப்பதிவேடு, நில உரிமை விவரம், நில ஆவணம்,
Patta chitta in tamil, patta number, land chitta, land patta, details of chitta, what is chitta, what is patta, revenue department document, information about chitta patta, computer chitta, 10(1) chitta, land record,
Video Created By R.MOHANRAJ வீடியோ உருவாக்கம் ரா.மோகன்ராஜ்.
Информация по комментариям в разработке