கால் வைக்கவே நடுங்குகின்றது | மக்கள் பாம்புகளை ஏன் இங்கே விடுகிறார்கள் Around The Nainativu Island

Описание к видео கால் வைக்கவே நடுங்குகின்றது | மக்கள் பாம்புகளை ஏன் இங்கே விடுகிறார்கள் Around The Nainativu Island

நயினாதீவு (Nainativu)  யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சப்த தீவுகள் என அழைக்கப்படுகின்ற   ஏழு தீவுகளில் ஒன்று ஆகும்( நாகதீப) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தீவில் உள்ள  நாக பூசணி அம்மன் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த கோயில் "நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில்" என்றே பெயர் பெற்றதாகும். இந்த கோயிலின் அண்மையில் ஒரு சிறிய பௌத்த விகாரை உள்ளது. இதனை நாகவிகாரை என்று அழைப்பர்.  இலங்கையிலுள்ள பௌத்த சமயத்தவர்  கௌதம புத்தர்  இந்தத் தீவுக்கு வருகை தந்ததாக நம்புகிறார்கள். இந்த விகாரையில் சில பிக்குகள் உள்ளனர். இவர்களைத் தவிர இந்த தீவில் வரலாற்று ரீதியாக வசிக்கும் மக்கள் அனைவரும் தமிழர்களாகும்.

1976 இல் நயினாதீவில் மக்கள்தொகை சுமார் 4,750 பேர் அளவில் இருந்தது. ஆயினும், 2,500 பேர் அளவிலேயே இன்றைய மக்கள்தொகை உள்ளது.
இந்த தீவு யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக, தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதற்குக் கிழக்குத் திசையில்  பூங்கொடி தீவும் நேர் வடக்கில் அனலை தீவும் அமைந்துள்ளன.
நயினா தீவிற்குத் தரை வழியாகப் பயணிப்பதற்கான பாதைகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து நயினா தீவு செல்வோர் குறிகாட்டுவான் வரை பேருந்தில் சென்று, குறிகாட்டுவானில் இருந்து படகு ஊடாக நயினாதீவு தீவிற்கு செல்ல முடியும். நயினா தீவிக்குள் ஒரு உள்ளூர் பேருந்து சேவை உள்ளது.


கசடறக் கற்க:
📞Contact "Kasadara Karka" at +94 0777 519 807

SUBSCRIBE AND TURN ALL NOTIFICATIONS ON TO SEE NEW VIDEOS!
https://www.youtube.com/CharalTamizhi...

Follow Us On:
► Facebook:   / charaltamizhi  
► Instagram:   / charaltamizhi  
► Web: http://www.charaltamizhi.com

#travelvlog #tamilvlog #sltamil #charaltamizhi #Jaffnavlog

Комментарии

Информация по комментариям в разработке