#சுத்தாத்வைத_சைவசித்தாந்தம்
|| மகேசுர வடிவம் ||
சிவபெருமானுக்குரிய வடிவங்கள் அருவம், அருவுருவம்,
உருவம் என்னும் மூன்றுமாம். சிவபெருமான் அருவத்திருமேனியுடைய பொழுது சிவன் எனவும், அருவுருவத்திருமேனி
யுடையபொழுது சதாசிவன் எனவும், உருவத்திருமேனி
யுடையபொழுது மகேசுரன் எனவும் பெயர்பெறுவர். ஆன்மாக்களாகிய நம்போலிகளுடைய உருவம் இருவினைக்கு ஈடாகத் தோல் எலும்பு முதலிய தாதுக்களால் உண்டாகிய உருவம்;
சிவபெருமானுடைய உருவம், ஆன்மாக்கள் செய்யும் தியானம்
பூசை முதலியவைகளின் பொருட்டுச் சிவசத்தியாகிய திருவருட்
குணங்கள் இன்னது இனனது இன்ன இன்ன அவயவம் என்று
பாவிக்கப்படும் உருவமாம்.
உருவருள் குணங்க ளோடும் உணர்வருள் உருவிற் றோன்றும்
கருமமும் அருள ரன்றன் கரசர ணாதி சாங்கம்
தருமரு ளுபாங்க மெல்லாம் தானருள் தனக்கொன் றின்றி
அருளுரு உயிருக் கென்றே ஆக்கினன் அசிந்த னன்றே.
சிவஞானசித்தியார்.
மகேசுர வடிவங்கள் சந்திரசேகரர், உமாமகேசர், இடபாரூடர், சபாபதி, கல்யாணசுந்தரர், பிக்ஷாடனர், காமாரி, காலாரி,
திரிபுராரி, ஜலந்தராரி, மாதங்காரி, வீரபத்திரர், ஹரியர்த்தர்,
அர்த்தநாரிசுரர், கிராதர், கங்காளர், சண்டேசாநுக்கிரகர்,
நீலகண்டர், சக்கரப்பிரதர், கஜமுகாநுக்கிரகர், சோமாஸ்கந்தர்,
ஏகபாதர், சுகாசினர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோற்பவர் என்னும்
இருபத்தைந்துமாம். இந்தப் பஞ்சவிம்சதி (இருபத்தைந்து)
விக்கிரக பேதங்களைச் சிறிது வேறுபடுத்திக் கூறுவதுமுண்டு.
அது ஆகமபேதமெனக் கொள்க.
சதாசிவமூர்த்தியினுடைய ஈசானதிருமுகத்தில் சோமாஸ்கந்தர், சபாபதி, இடபாரூடர், சந்திரசேகரர், கல்யாணசுந்தரர்
என்னும் மூர்த்திகள் தோன்றினர்.
தத்புருஷதிருமுகத்தில் பிக்ஷாடனர், காமாரி, காலாரி, ஜலந்தராரி, திரிபுராரி என்னும் மூர்த்திகள் தோன்றினர்.
அகோரதிருமுகத்தில் கஜாரி, வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி,
கிராதர், நீலகண்டர் என்னும் மூர்த்திகள் தோன்றினர்.
வாமதேவ திருமுகத்தில் கங்காளர், சக்கரதானர், கஜமுகானுக்கிரகர், சண்டேசானுக்கிரகர், ஏகபாதர் என்னும் மூர்த்திகள்
தோன்றினர்.
சத்தியோஜாத திருமுகத்தில் லிங்கோற்பவர், சுகாசீனர், உமாமகேசுரர், ஆபதோத்தாரணர், க்ஷேத்திரபாலர் என்னும்
மூர்த்திகள் தோன்றினர்.
சைவசாஸ்திர பரிபாலனம் - 1940 என்னும் நூலில் இருந்து...
Информация по комментариям в разработке