வாரிசுகளுக்கு இடம் இல்லை ! அன்றே மன்னர்கள் போட்ட கடும் உத்தரவுகள் | Uthiramerur | KanchipuramTemples

Описание к видео வாரிசுகளுக்கு இடம் இல்லை ! அன்றே மன்னர்கள் போட்ட கடும் உத்தரவுகள் | Uthiramerur | KanchipuramTemples

கோயில்களுக்கு பெயர் போன காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. பல்லவர்களால் கட்டப்பட்டது. கோயிலின் பிறகால இணைப்புகள் சோழர்களால் உருவாக்கப்பட்டவை.

இந்த கட்டிடம் பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு இந்திய தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.

சுமார் 0.5 ஏக்கர் பரப்பளவை கொண்டது வைகுண்ட பெருமாள் கோயில். ஸ்ரீதேவி , பூதேவி இரு பக்கங்களிலும் உள்ள வைகுண்டநாதரின் சிலை இந்த சன்னதியில் உள்ளது.

2500 சதுர அடியில் ஒரு மண்டபம் உள்ளது. கோயிலின் கூரைகள் தூண்கள் இன்றி சுவர்களால் தாங்கப்படுகின்றன.சோழர் கால கல்வெட்டுகள் மண்டபத்தின் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன.

பராந்தக சோழன் காலத்தில் கிராம தலைவர்களை தேர்ந்தெடுக்க குடவோலை வழக்கம் நடைமுறையில் இருந்ததை இக்கோயிலின் கல்வெட்டுகள் கூறுகின்றன.

கிராம மக்கள் ஒரு பொது இடத்தில் கூடி, பனை இலைகளில் தங்களுக்கு விருப்பமான தலைவர்கள் பெயரை எழுதி, ஒரு பானையில் போடுவர். குடம் என்பது பானையை குறிக்கிறது. இதன் காரணமாக தான் இந்த தேர்தல் முறைக்கு குடவோலை என்ற பெயர் வந்தது.

முதுமையில் உள்ளவர்கள் வாக்களிக்க்க தடை இருந்தது. வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச வயது, கல்வி தகுதி, சொத்து ஆகியவை விதிக்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மக்கள் சேவையில் சரியாக ஈடுபடவில்லை என்றாலும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்களின் வாரிசுகள் தேர்தலில் போட்டியிட கூடாது என்ற விதியும் பின்பற்றப்பட்டது.

இது போல பல்வேறு கடுமையான தண்டனைகளும் இருந்ததாக கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.#Uthiramerur #KanchipuramTemples #VaikundaPerumal #Modi #Dinamalar

Комментарии

Информация по комментариям в разработке