நாளை உலகம்
உங்களை நம்பி
வெல்ல வாடா
அருமைத் தம்பி
உலகை மாற்றிட
நீ வருவாயே,
இளைய தளிரே
நான் அழைத்தேனே
*
ஏற்றத் தாழ்வினை
ஏற்காதே என்றும்
ஒன்றே யாவரும்
என்போமே எங்கும்
உறவு செழித்தால் உலகம் செழிக்கும்
அன்பின் வழியில் அகிலம் நிலைக்கும்
*
வெறியின் பிடியில்
தோற்காதே என்றும்
நெறியின் வழியை
மாற்றாதே என்றும்
நேர்மை நிலைத்தால் அகிலம் சிரிக்கும்
வாய்மை வழியில் உலகம் பிறக்கும்
*
மனித நேயம்
மனதினில் கொள்வாய்
தனது நலத்தை
கடைசியில் வைப்பாய்
ஏழை நிமிர்ந்தால் உலகம் நிமிரும்
உழவின் வழியில் உலகம் உயரும்
*
அன்னை தந்தை
சொல்படி நடப்பாய்
ஆன்றோர் வாக்கை
மனதில் நடுவாய்
சிந்தை வெளுத்தால் செயலும் வெளுக்கும்
உன்னை அழைக்கும் விடியல் கிழக்கும்
*
கல்வி என்னும்
கலங்கரை விளக்கம்
வாழ்க்கைப் படகைக்
கரையில் சேர்க்கும்
அறிவைப் பெருக்கு மனதைத் துலக்கு
அறிவின் ஒளியில் மடமையை விலக்கு
*
#குழந்தைகள்தினம் #குழந்தைகள்பாடல் #குழந்தைகள்தினபாடல்
#HappyChildrensDay, #ChildrensDay2024, #CelebratingChildren, #KidsAreTheFuture, #InnocenceOfChildhood, #JoyOfChildren, #ForTheFuture, #ChildhoodMemories, #LoveForChildren, #ChildrensDayCelebration, #ProtectOurChildren, #EveryChildMatters, #CherishChildhood , #ChildrensDaySong, #SongsForChildren, #KidsSongs, #ChildrensDayMusic, #CelebrateWithMusic, #ChildhoodMelodies, #SongsOfInnocence, #HappyChildrensDaySong, #MusicForKids, #SingingForChildren, #ChildrensDayCelebration, #ChildhoodTunes, #SongsForKids, #JoyfulSongs, #ChildrensDayAnthem, #JawaharlalNehru, #NehruJi, #PanditNehru, #JawaharlalNehruJayanti, #ChachaNehru, #RememberingNehru, #NehruLegacy, #NehruThoughts, #FirstPrimeMinister, #IndianHistory, #NehruAndChildren, #NehruVision, #ChildrensDayNehru, #TributeToNehru, #LeadersOfIndia,
#குழந்தைகள்_தினம், #சர்வதேசகுழந்தைகள்_தினம், #குழந்தைகள், #சகா_நேரு, #நேரு_தினம், #குழந்தைகளுக்கானபாடல்கள், #குழந்தைகள்_மகிழ்ச்சி, #இன்றையகுழந்தைகள்_நாளையஇந்தியா, #குழந்தைகள்_விழா, #குழந்தைகளுக்கானஅன்பு, #நேருவின்_குழந்தைகள்_பாசம், #நமது_குழந்தைகள், #வாழ்ககுழந்தைகள், #குழந்தைகள்_காவல்
Информация по комментариям в разработке