வாசி தீரவே காசு நல்குவீர் - Vaasi Theerave - for prosperity - கையில் காசு நிலைக்க - செல்வ வளம் பெற - கடன் பிரச்சனை தீர, வழக்குகளில் வெற்றி பெற
#வாசிதீரவே, #காசுநல்குவீர், #VaasiTheerave, #prosperity, #கையில்காசுநிலைக்க, #செல்வவளம்பெற, #கடன்பிரச்சனைதீர
#GnyanasambandarThevaram, #ஞானசம்பந்தர்தேவாரம், #Shaivam, #சைவம், #Saivam,
#Thirumurai , #திருமுறை, #ThirumuraiAmudham, #திருமுறைஅமுதம், #Thevaram , #தேவாரம், #Thivasagam, #திருவாசகம், #PanniruThirumurai, #பன்னிருதிருமுறை, #TamilMusic, #TamilIsai, #தமிழ்இசை, #hinduism #Thevarapadalgal, #தேவாரப்பாடல்கள் #KREswaran, #KRஈஸ்வரன் , #ThirumuraiselvarPerasiriyarKREswaran, #திருமுறைச்செல்வர்பேராசிரியர்ஈஸ்வரன் #DrSrividhyaChandrasekar, #PannisaiselviDrSrividhyaChandrasekar, #பண்ணிசைச்செல்விமுனைவர்ஸ்ரீவித்யாசந்திரசேகர்,
வாசி தீரவே, காசு நல்குவீர்
அருளியவர் : திருஞானசம்பந்தர்
தலம் : திருவீழிமிழலை
திருமுறை : முதல் திருமுறை
பண் : குறிஞ்சி
ராகம் : ஹரிகாம்போதி
தாளம் : ஆதி
ஸ்வாமி : வீழிநாதேஸ்வரர் / வீழியழகர்
அம்பாள் : சுந்தரகுசாம்பிகை / அழகுமுலையம்மை
சிறப்பு : திருவிருக்குக்குறள்
வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே. 1
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே. 2
செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே. 3
நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே. 4
காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாமம் மிழலையீர், சேமம் நல்குமே. 5
பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. 6
மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. 7
அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. 8
அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே. 9
பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே. 10
காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.
Vaasitheeravee Kasu Nalguveer
Composer : Thirugnyanasambandar
Place : Thiruveezhimizhalai
Thirumurai : Thirumurai 1
Pann : Kurinchi
Raagam : Harikambothi
Thaalam : Aadhi
Swamy : Veezhinaatheswarar / Veezhiazhagar
Ambal : Sundarakusambigai / Azhagumulaiammai
Speciality : Thiruvirukukural
Vāci tīravē, kācu nalkuvīr
māciṉ miḻalaiyīr, ēca lillaiyē. 1
Iṟaiva rāyiṉīr, maṟaikoḷ miḻalaiyīr
kaṟaikoḷ kāciṉai, muṟaimai nalkumē. 2
Ceyya mēṉiyīr, meykoḷ miḻalaiyīr
paikoḷ araviṉīr, uyya nalkumē. 3
Nīṟu pūciṉīr, ēṟa tēṟiṉīr
kūṟu miḻalaiyīr, pēṟum aruḷumē. 4
Kāmaṉ vēvavōr, tūmak kaṇṇiṉīr
nāmam miḻalaiyīr, cēmam nalkumē. 5
Piṇikoḷ caṭaiyiṉīr, maṇikoḷ miṭaṟiṉīr
aṇikoḷ miḻalaiyīr, paṇikoṇ ṭaruḷumē. 6
Maṅkai paṅkiṉīr, tuṅka miḻalaiyīr
kaṅkai muṭiyiṉīr, caṅkai tavirmiṉē. 7
Arakkaṉ neritara, irakka meytiṉīr
parakku miḻalaiyīr, karakkai tavirmiṉē. 8
Ayaṉum mālumāy, muyalum muṭiyiṉīr
iyalum miḻalaiyīr, payaṉum aruḷumē. 9
Paṟikoḷ talaiyiṉār, aṟiva taṟikilār
veṟikoḷ miḻalaiyīr, piṟiva tariyatē. 10
Kāḻi mānakar, vāḻi campantaṉ
vīḻi miḻalaimēl, tāḻum moḻikaḷē.
Информация по комментариям в разработке