செய்வினையிலிருந்து நம்மை காக்கும் கஜசம்ஹாரமூர்த்தி |வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் ஐயப்பன் பிறந்த தலம்

Описание к видео செய்வினையிலிருந்து நம்மை காக்கும் கஜசம்ஹாரமூர்த்தி |வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயில் ஐயப்பன் பிறந்த தலம்

வீரட்டானேசுவரர் கோயில்,
வழுவூர்
கஜசம்ஹாரமூர்த்தி தலம்

மூலவர் : கிருத்திவாசர் (வீரட்டேசுவரர்)
அம்மன் / தாயார் : பாலகுராம்பிகை, இளங்கிளைநாயகி
தலவிருட்சம் :தேவதாரு,வன்னி
தீர்த்தம் : பாதாளகங்கை
பாடியவர் : திருஞானசம்பந்தர்( வைப்புத்தலம்)
புராண பெயர் : தாருகா வனம்
ஊர்: வழுவூர்
மாவட்டம்: மயிலாடுதுறை

நாட்டிய மேதை வழூவூர் ராமைய்யாபிள்ளை பிறந்த ஊர்.

பிரளய காலத்திலும் அழியாமல் வழுவியதாதலின் வழுவூர் என்று ஆனது. இதிகாசங்களில் இத்தலம் தாருகாவனம் என்று குறிப்பிடப்படுகிறது.

சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கும் அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில். அட்ட வீரட்டத் தலங்களில் 6வது தலம்.


48000 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர்

வராகி பூஜித்த தலம்.

இத்தல விநாயகர் செல்வ விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்புரிகிறார்.

முதலில் நந்தி, பின்பு பஞ்சபிரம்ம தீர்த்தம்
தீர்த்தத்தில் 5 கிணறுகள் உள்ளன.
இதற்கு பஞ்சமுக கிணறு என்று பெயர்.
ஈசான தீர்த்தம் அல்லது பாதாள கங்கை எனவும் கூறப்படுகிறது.
இத்தீர்த்தத்தில் நீராடினால் குழந்தைப்பேறு கிட்டும். ஆணவம் நீங்கி ஞானம் கிடைக்கும்.
அதன்பிறகு மூலஸ்தானம் என்று வித்தியாசமான கோயில் அமைப்பை இங்கு மட்டுமே காண முடியும்.


கேட்டை நட்சத்திரத்திற்கு - முக்கிய ஸ்தலம் - வழுவூர்

தலவரலாறு

தாருகாவனத்து முனிவர்கள் தாமே தவ முனிவர்கள் எனவும் தாம் செய்யும் நற்கருமங்களே பலனைத்தரும் எனவும் இதற்குக் கடவுள் துணை தேவையில்லை எனவும் கருதி ஆணவம் கொண்டனர்.

அவ்வாறே அவர்களது மனைவியரும் நினைத்தனர். இவர்களது ஆணவத்தையும் கர்வத்தையும் அழிக்கும் பொருட்டு சிவபெருமான் பிட்சாடனராகவும், திருமால் மோகினியாகவும் உருவெடுத்து தாருகாவனம் வந்தனர்.

முனிவர்கள் மோகினியைக் கண்டும், அவர்களது மனைவியர் பிட்சாடனரைக் கண்டும் தந்நிலை மறந்தனர்.

பெருமான் மோகினியோடு கூடி ஐயனாரை பெற்றெடுத்து மறைந்தார்.

முனிவர்கள் சிவபெருமானின் செயல் கண்டு கோபம் கொண்டனர்.

வேள்வி செய்து அக்னி, புலி, மான், மழு, பாம்பு, முயலகன் ஆகியவற்றை சிவபெருமான் மீது ஏவி தோல்வி கண்டு கடைசியாக மதயானையை வேள்வி தீயிலிருந்து உண்டாக்கி பெருமான் மீது ஏவினர்.

பிட்சாடனர் உருவில் வந்த பெருமான் யானையின் வயிற்றுக்குள் புகுந்து கொண்டார். உலகம் இருள அம்பிகை ஐயனைக் காணாது அஞ்சினாள்.

பெருமான் யானையின் வயிற்றிலிருந்து கலக்க, கொல்ல வந்த யானை வலி தாங்க முடியாமல் தவிக்க, சுவாமி யானையின் வயிற்றை கிழித்துக் கொண்டு (ஊர்த்துவ தாண்டவம்) வீர நடனமாடிக் கொண்டு வந்தாராம்..!

அதன்பின் ஆணவம் அழிந்த முனிவர்கள், வந்தது சிவன் என்பதை அறிந்து மன்னிப்பு கேட்டனர். யானையை சம்ஹராம் செய்தவர் என்பதால் இறைவன் “கஜசம்ஹாரமூர்த்தி’ எனப்படுகிறார். சிவபெருமானின் உள்ளங்கால் தரிசனம் இத்தலத்தில் மட்டுமே பெறமுடியும்.

திருவடியை யானையின் தலைமேல் ஊன்றி அதன் தோலைக் கிழித்துப் போர்த்தும் நிலையில் பெரிய திருவுருவத்தோடு கஜசம்காரமூர்த்தி விளங்குகிறார்.

சுவாமியின் உள்ளங்காலை பக்தர்கள் இத்தலத்தில் மட்டுமே, இந்த மூர்த்தியிடம் மட்டுமே தரிசனம் செய்யலாம்.

சிதம்பரத்தில் சிதம்பர ரகசிய பிரதிஷ்டை உள்ளது போல் இங்கும் கஜசம்ஹார மூர்த்திக்கு பின்னால் யந்திர பிரதிஷ்டை உள்ளது.


சனிஸ்வரபகவான்:

சூரிய மண்டலத்தில் விக்கிரம ராஜாவோடு சனி பகவான் யுத்தம் செய்கிறார். இதில் விக்கிரமராஜா தோற்றுப்போய்விடுகிறார். இத்தீர்த்தத்தில் வந்து விழுகிறார். தீர்த்தக்குளத்தில் குளித்து விட்டு சுவாமியை வழிபடுகிறார். சுவாமி அவருக்கு அருள்பாலிக்கிறார்.

சனிஸ்வரபகவான் சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்கிறார். சனிபகவானை சுவாமி ஒரு காலை முடமாக்கி விடுகிறார். இத்தலத்தில் சனிபகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. இங்குள்ள சனிபகவான் கையில் வில்லோடு இருக்கிறார்.


தலசிறப்பு

அமாவாசை தோறும் சுவாமி சந்நிதியில் உள்ள தீர்த்தத்தில் சுவாமி தீர்த்தம் கொடுத்தருளும் நாளில் இத்தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவோர்க்கு புத்திர தோஷம் நீங்கி நன்மக்கட்பேறு வாய்த்து வருகிறது

திருவிழா

மாசிமகம் – யானை சம்கார ஐதீக நிகழ்ச்சி -10 நாட்கள் திருவிழா – தினமும் இரண்டு வேளை வீதியுலா. 9ம் நாள் யானை சம்கார நிகழ்ச்சி. 10ம் நாள் தீர்த்த வாரி இத்திருவிழா இத்தலத்தில் நடைபெறும் மிகச்சிறப்பான திருவிழா ஆகும்.

இரவு தினந்தோறும் யந்திர பிரதிஷ்டைக்குப் பூஜை நடைபெறுகிறது.

அமாவாசை தோறும் சுவாமி தீர்த்தம் கொடுத்தருள்கிறார்.

இங்குள்ள தீர்த்தத்தில் 5 கிணறுகள் உள்ளன. இதற்கு பஞ்சமுக கிணறு என்று பெயர்.

திருஞான சம்பந்தர் எட்டு வீரட்டங்களைக் குறிப்பிட்டு அருளியுள்ள திருப்பாடல்களில் இத்தலத்தை குறிப்பாக அருளியுள்ளார்.

இது தேவார வைப்புத்தலம் என போற்றப்படுகிறது.

பிராத்தனை

கல்யாணவரம் வேண்டுவோர் கல்யாண மாலை சாத்துதல், தலத்தின் சிறப்பு மூர்த்தியான கஜசம்கார மூர்த்திக்கு பின்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வீக யந்திரத்தை வழிபட்டால் பில்லி , சூன்யம், ஏவல், மாந்திரீகம் ஆகியவை விலகி நன்மை பயக்கும்.

திறக்கும் நேரம் : காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண்

+919080787133


மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்

+91 7994347966

அமைவிடம்

கும்பகோணத்தில் இருந்து 38 km
கும்பகோணம் மயிலாடுதுறை சென்று
மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் செனாறால் ஆசிக்காடு வழியாக வழுவூர் அடையலாம்.

கோயில் Google map link

https://maps.app.goo.gl/wVi9SaMxJHHzL...

திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயில் தரிசனம்

   • திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயில் | எம...  

if you want to support us via UPI id

9655896987@ibl

Join this channel to get access to perks:

   / @mathina  

தமிழ்

Комментарии

Информация по комментариям в разработке