Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть சிவன் அருள் கிடைக்க திருக்காளத்தி திருமுறை பதிகம்

  • சிவனடியார்களின் குரல் Sivanadiyarkalin Kural
  • 2023-08-13
  • 461
சிவன் அருள் கிடைக்க திருக்காளத்தி திருமுறை பதிகம்
  • ok logo

Скачать சிவன் அருள் கிடைக்க திருக்காளத்தி திருமுறை பதிகம் бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно சிவன் அருள் கிடைக்க திருக்காளத்தி திருமுறை பதிகம் или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку சிவன் அருள் கிடைக்க திருக்காளத்தி திருமுறை பதிகம் бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео சிவன் அருள் கிடைக்க திருக்காளத்தி திருமுறை பதிகம்

#திருக்காளத்தி திருநாவுக்கரசர் சுவாமிகள் அருளிய ஆறாவது திருமுறை பதிகம் எண்-8 - விற்று ஊண் ஒன்று இல்லாத- என்று தொடங்கும் பாடல்.

சிவசிவ
திருச்சிற்றம்பலம்

திருக்காளத்தி

திருநாவுக்கரசர் சுவாமிகள் அருளிய

ஆறாவது திருமுறை

பதிகம் எண்-8

பண்-திருத்தாண்டகம்

விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான்காண்
வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சைஅல்லால்
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன்காண்
மயானத்து மைந்தன்காண் மாசு ஒன்று இல்லாப்
பொன்-தூண்காண் மா மணிநல்குன்று ஒப்பான்காண்
பொய்யாது பொழில்ஏழும் தாங்கி நின்ற
கல்-தூண்காண் காளத்தி காணப்பட்ட
கணநாதன்காண்; அவன் என் கண் உளானே.

இடிப்பான்காண் என் வினையை; ஏகம்பன்காண்;
எலும்புஆபரணன்காண்; எல்லாம் முன்னே
முடிப்பான்காண்; மூஉலகும் ஆயினான்காண்;
முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலை அறுத்த பாசுபதன்காண்;
பராய்த்துறையான்; பழனம் பைஞ்ஞீலியான்காண்;
கடித்தார் கமழ்கொன்றைக்கண்ணியான்காண்
காளத்தியான்அவன் என் கண் உளானே.

நாரணன்காண் நான்முகன்காண் நால்வேதம்காண்
ஞானப்பெருங்கடற்கு ஓர் நாவாய் அன்ன
பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண்
புரிசடைமேல் புனல் ஏற்ற புனிதன் தான்காண்
சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் தான்காண்
தன்மைக்கண்-தானேகாண் தக்கோர்க்கு எல்லாம்
காரணன்காண் காளத்தி காணப்பட்ட
கணநாதன்காண்; அவன் என் கண் உளானே.

செற்றான்காண் என் வினையை; தீஆடிகாண்;
திரு ஒற்றியூரான்காண்; சிந்தைசெய்வார்க்கு
உற்றான்காண்; ஏகம்பம் மேவினான்காண்;
உமையாள்நல்கொழுநன்காண்; இமையோர் ஏத்தும்
சொல்-தான்காண்; சோற்றுத்துறை உளான்காண்;
சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக்
கற்றான்காண் காளத்தி காணப்பட்ட
கணநாதன்காண்; அவன் என் கண் உளானே.

மனத்துஅகத்தான்; தலைமேலான்; வாக்கின் உள்ளான்;
வாய் ஆரத் தன் அடியே பாடும் தொண்டர்-
இனத்துஅகத்தான்; இமையவர்தம் சிரத்தின்மேலான்;
ஏழ்அண்டத்து அப்பாலான்; இப் பால் செம்பொன்
புனத்துஅகத்தான்; நறுங்கொன்றைப்போதின் உள்ளான்;
பொருப்புஇடையான்; நெருப்புஇடையான்; காற்றின் உள்ளான்;
காளத்தியான்அவன் என் கண் உளானே.

எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான்காண்;
ஏகம்பம் மேயான்காண்; இமையோர் ஏத்தப்
பொல்லாப் புலன்ஐந்தும் போக்கினான்காண்;
புரிசடைமேல் பாய் கங்கை பூரித்தான்காண்;
நல்ல விடை மேற்கொண்டு நாகம் பூண்டு
நளிர் சிரம் ஒன்று ஏந்தி ஓர் நாண்ஆய் அற்ற
கல்ஆடை மேல் கொண்ட காபாலீகாண்
காளத்தியான்அவன் என் கண் உளானே.

கரிஉருவுகண்டத்து எம் கண் உளான் காண்;
கண்டன்காண்; வண்டு உண்ட கொன்றையான்காண்;
எரி பவள வண்ணன்காண்; ஏகம்பன்காண்;
எண்திசையும் தான் ஆய குணத்தினான்காண்;
திரிபுரங்கள் தீ இட்ட தீஆடீகாண்;
தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான்காண்;
கரிஉரிவை போர்த்து உகந்த காபாலீகாண்
காளத்தியான்அவன் என் கண் உளானே.

இல்ஆடிச் சில்பலி சென்று ஏற்கின்றான்காண்;
இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான்காண்;
வில்ஆடி வேடனாய் ஓடினான்காண்;
வெண்நூலும் சேர்ந்த அகலத்தான்காண்;
மல் ஆடு திரள்தோள்மேல் மழுவாளன்காண்;
மலைமகள்தன் மணாளன்காண்; மகிழ்ந்து முன்நாள்
கல்லாலின்கீழ் இருந்த காபாலீகாண்
காளத்தியான்அவன் என் கண் உளானே.

தேனப் பூ வண்டு உண்ட கொன்றையான்காண்;
திரு ஏகம்பத்தான்காண்; தேன் ஆர்ந்து உக்க
ஞானப்பூங்கோதையாள் பாகத்தான்காண்;
நம்பன்காண்; ஞானத்துஒளி ஆனான்காண்;
வானப் பேர் ஊரும் மறிய ஓடி
மட்டித்து நின்றான்காண்; வண்டு ஆர் சோலைக்
கானப்பேரூரான்காண்; கறைக்கண்டன்காண்
காளத்தியான்அவன் என் கண் உளானே.

இறையவன்காண்; ஏழ்உலகும் ஆயினான்காண்;
ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான்காண்;
குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான்காண்;
குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான்காண்;
மறை உடைய வானோர்பெருமான் தான்காண்;
மறைக்காட்டு உறையும் மணிகண்டன்காண்;
கறை உடைய கண்டத்து எம் காபாலீகாண்
காளத்தியான்அவன் என் கண் உளானே.

உண்ணா அருநஞ்சம் உண்டான் தான்காண்;
ஊழித்தீ அன்னான்காண்; உகப்பார் காணப்
பண் ஆரப் பல்இலயம் பாடினான்காண்;
பயின்ற நால்வேதத்தின் பண்பினான்காண்;
அண்ணாமலையான்காண்; அடியார்ஈட்டம்
அடிஇணைகள் தொழுது ஏத்த அருளுவான்காண்;
கண் ஆரக் காண்பார்க்கு ஓர் காட்சியான்காண்
காளத்தியான்அவன் என் கண் உளானே.

*அருள்தரும் #ஞானபிரசுனாம்பிகை அம்மை உடனமர் அருள்மிகு #திருக்காளத்தியப்பர் திருமலரடிகள் போற்றி போற்றி


#ஸ்ரீகாளஹஸ்தி #காளஹஸ்தி #srikalasthisivantemple #Thevaram #sivanpadal #sivansongsintamil #sivanadiyar #thirumuraisongsintamil #பன்னிருதிருமுறை #alandhanuganthulyricsintamil #newsivansongs #omnamahsivaya #prathosam #sivanbakthipadal #sivansongstamil #sivanvalipadumuraikalintamil #thevaramsongsintamilwithlyrics #thirumuraipadalkal #thirumuraipadalgal #thirumuraipathigamintamil #unaveuyirnalam #vengayachutneyintamil #சிவன்பாடல் #இடரினும்தளரினும்எனதுறுநோய் #சிவன்பக்திபாடல்கள் #சிவன்பாடல்கள் #செய்யனேதிருஆலவாய்மேவிய #தெளிவுகுருவின்திருமேனிகண்டல் #தேவாரம்திருமுறைபாடல்கள் #தேவாரம்பாடல்கள் #திருமுறைபாடல்கள் #மந்திரம்ஆவதுநீறு
#மறையுடையாய்தோலுடையாய் #சிவனடியார்குரல் #அடியாரின்குரல் #thevarasong #பன்னிருதிருமுறை_பாட்டும்_பொருளும் #சிவனடியார்களின்குரல்பாடல் #sivanadiyarkural #adiyarkural #adiyarkuralpaadal #sivan_whatsapp_status_tamil #sivanadiyar
#திருமுறைபாடல் #thevaaram #sivan_whatsapp_status_tamil #dhevarapadalkal #சிவப்புராணம் #அடியார் திருமுறை #dhevarapadalkal #sivan_whatsapp_status_tamil #sivan #thevaram #sivansongstatus #sivansong #thevarampadal #திருமுறைகள் #திருமுறைஅமுதம் #திருஞானசம்பந்தர் #sivan #thevaram #சிவனடியார்கள் #சிவனடியார் #சிவனடியார்களின் #சிவனடியார்களின்குரல்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]